விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.
இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தா, ரித்திகாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.இந்த சீசனில் கோமாளிக்கு நிகராக காமெடி செய்து வருபவர்கள் மதுரை முத்து மற்றும் தீபா தான். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலம் ஏற்பட்டது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான். வெகுளித்தமான கிராமத்து மனம்மாறாத இவரது பேச்சில் மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். இவருக்கு இரண்டு மகன்கள் கூட இருக்கின்றனர். என் உயிரும் உலகமுமா இருக்கிற என் ரெண்டு மகன்களைப் பத்தி யாராச்சும் சின்னதா ஒரு குறை சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அந்த ஒரு விஷயத்துலதான் எனக்குக் கோபம் வரும். மத்தபடி எதுக்கும் நான் கோபமே படமாட்டேன் என்று கூறியுள்ளார் தீபா.
வீடியோவில் 13 நிமிடத்தில் பார்க்கவும்
ஆனால், தீபாவின் இரண்டு மகன்களுக்குமே ஒரு குறை இருப்பதாக கூறிஇருக்கிறார் தீபா. இது பலரும் அறிந்திராத ஒன்று. அதாவது ஒரு பிள்ளைக்கு காது கேட்கும் திறன் கம்மியாம். பின்னர் அவருக்கு காது கேட்கும் மெஷின் போட்டு பயிற்சி கொடுத்து பேச வைத்தார்களாம். அதே போல இன்னொரு மகனுக்கு இருதயத்தில் கோளாராம். இது வரை அவருக்கு இரண்டு சிகிச்சை செய்தார்களாம்.