ப்பா, தீபா அக்காவா இது ? திருமணத்தின் போது எவ்ளோ ஒல்லியா இருந்திருக்காங்க பாருங்க. இதோ புகைப்படம்.

0
912

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான பொது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போது ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். இந்த சீசனில் கோமாளிக்கு நிகராக காமெடி செய்து வருபவர்கள் மதுரை முத்து மற்றும் தீபா தான்.

இதையும் பாருங்க : எப்படிங்க இவ்ளோ ஒல்லியானிங்க – பிரியாமணியின் லேட்டஸ்ட் லுக்கை கண்டு வியந்த ரசிகர்கள்.

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இவர் இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே பல படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார், வெடிகுண்டு முருகேசன் என்று ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவர் ரசிகர்கள் மத்தியில் அரியப்பட்டது என்னவோ கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் தான். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை போன்றே இந்த நிகழ்ச்சியிலும் தனது வெகுளித்தனமான குணத்தால் பலரையும் கவர்ந்து வருகிறார். அதே போல தீபாவின் கணவரும் பலரையும் கவர்ந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தீபாவின் திருமண புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் அடையாளம் தெரியாத அளவு படு ஸ்லிம்மாக இருக்கிறார் தீபா.

-விளம்பரம்-
Advertisement