விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவரது பார்ட்னராக இருந்த சரத், பார்ப்பதற்கு அச்சு அசலாக திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் போன்று இருந்தார். மேலும், இவர் தீவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் பேசி அசத்தி காமெடிகள் செய்திருந்தார்.சரத் , கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றித் தொடரான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.
இதையும் பாருங்க : இத்தனை கோடி தான் ஆச்சி, ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் – 11 ஆண்டு கழித்து செல்வராகவன் சொன்ன உண்மையால் உருவாகும் சர்ச்சை.
யுதன் பாலாஜி நடித்த கனா காணும் காலங்கள் சீசனில் தான் சரத் நடித்திருந்தார். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில தொடர்களில் கூட நடித்திருக்கிறார்.
சரத் கடந்த அக்டோபர் மாதம் தான் கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும் மிஸ்டர் & மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இத்தனை ஆண்டுகள் சின்னத்திரையில் இருந்தாலும் தற்போது தான் சரத் தனது முதல் காரையே வாங்கி இருக்கிறார். தற்போது இன்ஸ்டாவில் அவர் புதிய கார் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.