ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் – 11 ஆண்டு கழித்து செல்வராகவன் சொன்ன உண்மையால் உருவாகும் சர்ச்சை.

0
7006
aayirathil
- Advertisement -

ஆயிரத்தில் ஒருவன் பட்ஜெட் குறித்து பொய் சொன்னதாக இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. செல்வராகவன் இயக்கிய படங்களிலேயே மிகவும் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

படம் வெளியான போது ஒரு சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தற்போது இந்த படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.க்ராபிக்ஸ் தொழில் நுட்பம் தமிழ் சினிமாவில் சரியாக பயன்படத்தப்படாமல் இருந்த காலகட்டத்தில் செல்வராகவன் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளை அருமையாக கையாண்டிருப்பார். அதுபோக சோழர் பரம்பரையின் வரலாற்றை விவரிக்கும் காட்சி மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க :பீஸ்ட் படத்தில் வில்லனாக நடிக்க மறுத்துள்ள மிஸ்கின் – காரணம் இதனாம் (ஏற்கனவே விஜய்யிடம் இப்படி சொன்னவர் தான)

- Advertisement -

இந்த படம் வெளியான போது இந்த திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியான 300, கிளாடியேட்டர் போன்ற படங்களின் தழுவல் தான் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து செல்வார்கவன் போட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள செல்வராகவன், ”ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி. ஆனால் இதை ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்த 32 கோடி என அறிவிக்க முடிவு செய்தோம்.

என்ன ஒரு முட்டாள்தனம்! படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும், அது சராசரியாகவே கருதப்பட்டது! முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது எனக் கற்றுக் கொண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த படம் வெளியான போது அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால், பல ஆண்டுகள் கழித்து தான் இந்த படம் பேசப்பட்டது என்பது கூறிப்பிடதக்கது.

-விளம்பரம்-
Advertisement