இஸ்லாம் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை சாய் சக்தி.

0
5362
saisakthi

பிரபல சின்னத்திரை நடிகரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சாய் சக்திக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்று உள்ளது. சீரியல் நடிகரான சாய்சக்தி ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார் ஆனால் இடையில் இவருக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வரவில்லை என்றும், இதனால் மனமுடைந்த தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், தனக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து தான் இவருக்கு கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த நிலையில் நடிகர் சாய் சக்தி இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார். மீஞ்சூரைச் சேர்ந்த ஃபத்துல் ஃபாத்திமாவுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகள் ஃபாத்திமா சாய்சக்தியின் உறவுக்காரப் பெண் என்கிறார்கள். ஃபாத்திமாவின் வீட்டில் வைத்து எளிமையான முறையில் நடந்துள்ளது.

- Advertisement -

இந்தத் திருமண நிகழ்ச்சியில் இரு தரப்புக் குடும்ப உறவுகளுடன் சாய்சக்திக்கு நெருக்கமா. ஏற்கனவே தனது திருமணம் குறித்து சாய்சக்தி இடம் கேட்டபோது அவர் கூறியது, நான் விவாகரத்து பெற்று இரண்டு வருடம் ஆகிவிட்டது. எனக்கு தனிமை மிகவும் மன அழுத்தத்தைத் தருகிறது. அதனால் வீட்டில் எனக்கு இன்னொரு வாழ்க்கையை ஏற்பாடு செய்ய முயற்சி செய்துள்ளார்கள்.

மும்பையில் இருக்கிற என்னுடைய சொந்தகார பெண் ஒருத்தரோடு தான் எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கிறது. மேலும், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க சமயத்தில் தான் இந்த கொரோனா வந்துவிட்டது. கொரோனா முடிந்ததும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று நாங்கள் முடிவு செய்து இருந்தோம்.

-விளம்பரம்-
Advertisement