தனக்கு விருது கொடுக்கப்படாததை எண்ணி மேடையில் அழுத தீபா – விஜய் டிவியை கழிவு ஊற்றும் ரசிகர்கள்.

0
1946
deepa
- Advertisement -

விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் , அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் இன்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமா துறை கலைஞர்களை கெளரவித்து வருகிறது.

-விளம்பரம்-

விஜய் அவார்ட்ஸ் போலவே விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞ்சர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலரும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : 13 ஆண்டுகளுக்கு முன்னரே படத்தில் ஒரு சிறு காட்சியில் நடித்துள்ள மாரி செல்வராஜ். வீடியோ இதோ.

- Advertisement -

ஆண்டு தோரும் நடைபெற்று வரும் இந்த விழா கடந்த வருடம் கொரோனா பிரச்சனை காரணமாக நடைபெறவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்திற்கான விஜய் டெலிவிஷன் விருதுகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் சிறந்த நடிகர் நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் பேசிய தீபா, தனக்கு விருது வழங்கப்படவில்லை என்று கண்ணீர் மல்க பேசினார். மேலும், மேலும் நடிகை தீபா தனக்கு விருதை அளித்திருந்தால் அவரின் அம்மாவின் போட்டோவை திரையில் காண்பிப்பதாக நினைத்ததாகவும், ஆனால் விருதை எனக்கு கொடுக்கவில்லை என வருந்தியுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தேவையில்லாதவர்களுக்கு எல்லாம் விருது கொடுப்பீங்க இவங்களுக்கு கொடுத்தா என்ன என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement