குக்கு வித் கோமாளி பிரபலத்திற்கு இப்படி ஒரு உயரிய விருது – குவியும் பாராட்டுக்கள். அப்படி என்ன விருது

0
324
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப்படுவதை ஒட்டி சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பேமஸ் என்று சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது.

-விளம்பரம்-

இதில் சமையல் மட்டும் இல்லாமல் காமெடி, என்டர்டைமெண்ட் என அனைத்து அம்சங்களையும் கொண்ட நிகழ்ச்சியாக உள்ளது. சமையல் நிகழ்ச்சியில் கோமாளி வைத்து சமையல் செய்யலாம் என்ற வித்தியாசமான கான்செப்ட்டை விஜய் டிவி தான் முதல் முறையாக அறிமுகம் செய்தது. இந்த நிகழ்ச்சிக்கு என்றே சோசியல் மீடியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், குத் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள்.

- Advertisement -

முதல் சீசனை விட இரண்டாவது சீசன் வேற லெவல்ல தெறிக்க விட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர்கள் சமையல் கலை வல்லுநர் செப் தாமு, வெங்கடேஷ் பட் ஆவர். இவர்கள் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சிடுசிடுவென்று இருந்தாலும் பின் கோமாளிக்கு இணையாக இவர்களுடைய என்டர்டைன்மென்ட் வேற லெவல். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் என்று விருது கிடைக்கப் போவதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் தாமு அவர்களுக்கு நவம்பர் 5 ஆம் தேதி அன்றுலண்டனில் நடைபெற இருக்கிற உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட இருப்பதாக அறிவித்து உள்ளார்கள். இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் செஃப் தாமுவுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பிறகு செப் தாமு என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement