அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார்.
சீரியஸ் செஃப் வெங்கடேஷ் பத் :
வெங்கடேஷ் பத் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருந்து வருகிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.
வெங்கடேஷ் பத் சந்திக்கும் விமர்சனங்கள் :
ஆனால், அந்த நிகழ்ச்சியில் மிகவும் கறாரான ஒரு நடுவராக இருந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக திகழ்ந்து வந்தார். சமையல் சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால், இவர் கோமாளிகளை அடிக்கடி பலமாக அடித்துவிடுகிறார் என்ற விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள்
இப்படி ஒரு நிலையில் வெங்கடஷ் பத், இதற்கு விளக்கம் கொடுத்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ‘உங்கள் அனைத்து பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. நீங்கள் உறங்க செல்லும் முன் மனம்விட்டு சிரிப்பீர்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள், இதில் எதையும் எடைபோட வேண்டாம்.
ஈஸியா எடுத்துக்கோங்க :
நாங்கள் செய்யும் அணைத்து விஷயங்களும் உங்களை சிரிக்க வைக்கத்தான். உங்களில் ஒரு சிலர் என் செயலால் காயப்பட்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் பார்ப்பது போல என்னுடைய எந்த செயலும் யாரையும் காயப்படுத்து. நாங்கள் எந்த அளவிற்கு ஜாலியாக இருக்கிறோம் என்பதை காட்ட அப்படி உங்களுக்கு அது காட்டப்படலாம். நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.