விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில்இருந்தது.

ந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் கனியும் ஒருவர். பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகீலா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் கனி, டைட்டிலை தட்டி சென்றார். இவருடைய உண்மையான பெயர் கார்த்திக்காக. இவர் பிரபல இயக்குனரான அகதியனின் மகளாவார்.

இதையும் பாருங்க : மத்தவன் Produce பண்ணா ஒரு நியாயம் நீங்க Produce பண்ணா ஒரு நியாயமா ? நயன்தாராவின் செயலால் கடுப்பான ரசிகர்கள்.

Advertisement

மேலும், இவரது கணவர் திரு, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர். அதே போல இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் தான். குக்கு வித் கோமாளிக்கு பின்னர் இவர் யூடுயூபிலும் பல வீடியோகளை பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் சிலர் ஏன் நீங்கள் தாலி அணிவதில்லை என்று தொடர்ந்து கேட்டு வந்தனர்.

இதற்கு வீடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்த கனி. நானும் தமிழ் கலாச்சாரத்தின்படி தாலி கட்டிக்கொண்டு தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால், மூன்று மாதத்திற்கு பின்னர் என் கணவர் கட்டிய தாலியை கழட்டிவிட்டு யாரோ சில உறவினர்கள் எனக்கு மூன்று முடிச்சி போட்டனர். அந்த தாலியை அணிய எனக்கு விருப்பமில்லை.

Advertisement

அதே போல தாலி என்பது தமிழ் கலாச்சாரமே இல்லை. உங்களில் எத்தனை பேர் உங்கள் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்து இருக்கிறீர்கள். நான் இன்றைக்கும் என் கணவர் கட்டிய தாலியை பத்திரமாக வைத்து இருக்கிறேன். என் கணவரை 8 வருடங்கள் காதலித்து 12 வருடங்கள் மனைவியாக வாழ்ந்து இரண்டு குழந்தையை பெற்று உள்ளேன். அதனால் தாலி இருந்தால் தான் நான் அவருக்கு மனைவியா அதனால் தான் தாலி அணிவது இல்லை என்று கூறியுள்ளார். கனியின் இந்த பேச்சு பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் தாலி அணியாதது உங்கள் விருப்பம் ஆனால், தாலி என்பது தமிழ் கலாசாரத்தில் இல்லை என்று சொல்வது மிகவும் தவறு என்று கூறி வருகின்றனர்.

Advertisement
Advertisement