அடேங்கப்பா, குக்கு வித் கோமாளி கனிக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருக்காங்களா. இதோ புகைப்படம்.

0
1234
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-24-1024x1009.jpg

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இதில் பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, ஷகீலா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள கனி தான் ரசிகர்ளுக்கு பரிட்சியமில்லாத ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர். ஆனால், இவரும் மிகப்பெரிய சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த பெண் தான்.இவருடைய உண்மையான பெயர் கார்த்திக்காக. இவர் பிரபல இயக்குனரான அகதியனின் மகளாவார்.

இவரது இரண்டு சகதரிகளும் நடிகைகள் தான். அதில் ஒருவர் சென்னை 28, அஞ்சாதே போன்ற படங்களில் நடித்தவரும் பிக் பாஸ் 2 போட்டியாளருமான விஜயலக்ஷ்மி. மற்றொருவரான நிரஞ்சனி, இவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக நடித்தவர். மேலும், இவரது கணவர் திரு, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர். மேலும், இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement