என்னங்க சொல்றீங்க, kpy குரேஷிக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா.- மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ.

0
1345
kureshi
- Advertisement -

பிரம்மாண்டமாக தனது மகளின் முதல் பிறந்தநாளை KPY குரேஷி கொண்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் காமெடி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் குரேஷி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில் தான். பின் இவர் வேலை தேடி சென்னைக்கு வந்தார். பல கனவுகளுடன் இலட்சியங்கள் உடன் சென்னைக்கு வந்தவர்களுள் குரேஷியும் ஒருவர்.

-விளம்பரம்-

பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மிமிக்ரி செய்யும் திறமையை பயன்படுத்தி இவர் விஜய் டிவிக்குள் நுழைந்தார். மேலும், திறமையாலும் கடின உழைப்பாலும் இன்று விஜய் டிவியின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த சீசனின் டைட்டில் வின்னரும் ஆனார். இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். பின் இவருக்கு சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

குரேஷி பற்றிய தகவல்:

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த ராஜா ராணி 1 சீரியலில் துணை கதாபாத்திரத்தில் குரேஷி நடித்திருந்தார். அதற்கு பிறகு இவர் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்திலும் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து நடித்து இருந்தார். அப்படியே இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், போட்டியாளராக பங்கு பெற்று வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கிறார்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி:

மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் குரேஷி . இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

-விளம்பரம்-

குரேஷி மகளின் பிறந்தநாள் வீடியோ:

இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் கவுண்டர்கள், காமெடிகள் எல்லாம் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறது. அதிலும் சில வாரங்களுக்கு முன் வந்த எபிசோடில் ஸ்ருத்திகா மாதிரி மேக்கப் போட்டு செம காமெடியாக பண்ணி இருந்தார். இந்த நிலையில் இவர் தன்னுடைய மகள் பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குரேஷிக்கு அயிரா என்ற குட்டி மகள் இருக்கிறார். தற்போது தான் இவருக்கு ஒருவயது ஆகிறது. மேலும், அயிராவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் மிகப்பெரிய அளவில் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் குரேஷி.

வைரலாகும் குரேஷி வீடியோ:

அந்த விழாவில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். kpy சரத், ரக்ஷன், ரோபோ சங்கர், சஞ்சீவ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பின் தன் மகளின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி மிகச் சிறப்பாக தன் மனைவியுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார் குரேஷி. அந்த வீடியோவை குரேஷி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் குரேஷிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவை வைரலாகி வருகின்றனர்.

Advertisement