குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியால் ஒரு பெண் கர்ப்பமானார் – குக்கு வித் கோமாளி பத் பேச்சு. ரசிகர்களின் Reaction.

0
495
Venkatesh
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார்.

இதையும் பாருங்க : ‘பூங்குயிலே’ – பாடலை எடுக்க 8 மாதம் காத்துகொண்டு இருந்தோம், ஏன் என்றால் – ரகசியம் சொன்ன ராஜ்கிரண் பட நடிகை.

- Advertisement -

குக்கு வித் கோமாளியால் கர்ப்பமான பெண் :

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் stress Bustarஆக இருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம் தான். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பெண் ஒருவர் கர்பமானதாக வெங்கடேஷ் பத் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தற்கொலை முடிவை கைவிட்ட நபர் :

சமீபத்திய எபிசோட் ஒன்றில் பேசிய பத் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு பெண் இந்நிகழ்ச்சி பார்த்து கர்ப்பமானதாக கூறினார். அதாவது இது அவ்வளவு ஜாலியாக டென்ஷனை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதாக கூறினார். அதே போல இந்த தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த ஒரு நபர் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்த்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தையே விட்டுவிட்டார் என்றும் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

வெங்கடேஷ் பத் சந்திக்கும் விமர்சனங்கள் :

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கும் தாமுவை விட வெங்கடேஷ் பத் தான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். அந்த வகையில் இவர் அடிக்கடி கோமாளிகளை பலமாக அடித்துவிடுகிறார், அவர்களை தரகுறைவாக பேசுகிறார் என்ற சர்ச்சையும் எழுந்தது. இதுகுறித்து பேசிய அவர், ‘உங்கள் அனைத்து பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. நீங்கள் உறங்க செல்லும் முன் மனம்விட்டு சிரிப்பீர்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாக இருக்கிறது. இதை ஒரு டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள், இதில் எதையும் எடைபோட வேண்டாம்.

This image has an empty alt attribute; its file name is 1-241-1024x677.jpg

வெங்கடேஷ் பத் கொடுத்த விளக்கம் :

நாங்கள் செய்யும் அணைத்து விஷயங்களும் உங்களை சிரிக்க வைக்கத்தான். உங்களில் ஒரு சிலர் என் செயலால் காயப்பட்டு இருக்கலாம். ஆனால், நீங்கள் பார்ப்பது போல என்னுடைய எந்த செயலும் யாரையும் காயப்படுத்து. நாங்கள் எந்த அளவிற்கு ஜாலியாக இருக்கிறோம் என்பதை காட்ட அப்படி உங்களுக்கு அது காட்டப்படலாம். நிகழ்ச்சியை பார்த்து ரசியுங்கள், அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றுகூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement