புகழ், மணிமேகலையை தொடர்ந்து புதிய காரை வாங்கிய CWC கோமாளி – யார் தெரியுமா ?

0
667
- Advertisement -

சின்னத்திரை பிரபலம் மதுரை முத்து புதிதாக கார் வாங்கி உள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் டிவி சேனல்களில் மிகவும் பிரபலமாகவும், ரசிகர்களின் மத்தியில் பேராதரவைப் பெற்று முன்னிலையில் இருக்கும் சேனல்களில் விஜய் டிவியும் ஒன்று. இந்த சேனலில் சீரியல்கள் மட்டுமில்லாமல் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், வார இறுதியில் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி பிற சேனலுக்கு கடும் போட்டியாக விஜய் டிவி திகழ்ந்து வருகிறது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதே விஜய் டிவி தான். தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் விஜய் டிவிதான் வழங்கி வருகிறது. அதற்கு பிறகு பிரபலமான நிகழ்ச்சிகளாக கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக், பிக்பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

மதுரை முத்து பற்றிய தகவல்:

இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். மதுரை முத்து சிறுவயதிலிருந்தே மேடைப் பேச்சாளராக திகழ்ந்தவர். பின்னர் இவர் பல நிகழ்ச்சியின் மூலம் கலந்துகொண்டு மீடியாவில் நுழைந்தார். அது மட்டுமில்லாமல் பல பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்திருக்கிறார்.

விஜய் டிவியில் மதுரை முத்து பங்கு:

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக திகழ்கிறார் மதுரை புதூர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதற்குப் பிறகு இவர் விஜய் டிவிக்கு தாவினார். அப்படியே விஜய் டிவி லேயே செட்டில் ஆகிவிட்டார் என்று சொல்லலாம். இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து இருக்கிறார் மதுரை முத்து.

-விளம்பரம்-

மதுரை முத்துவின் சின்னத்திரை பயணம்:

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் மதுரை முத்து பங்கு பெற்று வருகிறார். இவருடைய நகைச்சுவை எல்லாம் மக்கள் மத்தியில் ரசிக்க வைத்து வருகிறது. இந்த நிலையில் மதுரை முத்து குறித்து ஒரு ஸ்பெசலான செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், மதுரை முத்து தற்போது புதிதாக கார் வாங்கி இருக்கிறார்.

மதுரை முத்து வாங்கிய புது கார் :

சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்களான மணிமேகலை, சரத், சிவாங்கி, மகேஷ், தாடி பாலாஜி, சித்து-ஸ்ரேயா, சரண்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கார் வாங்கி அதனுடன் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். அந்த லிஸ்டில் தற்போது மதுரை முத்துவும் இணைந்திருக்கிறார். தற்போது இவர் தான் புதிதாக வாங்கி இருக்கும் கார் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையு இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் மதுரை முத்துவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement