மணிமேகலை செய்ததை பார்த்து யூடுயூபே ட்வீட் செய்த வீடியோ. என்னன்னு நீங்களே பாருங்க.

0
22689
manimegalai

சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார். மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள்.

VJ Manimeghalai surprises Youtube team - latest post goes viral

ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்று வருகிறார். கடந்த ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை வீட்டில் குக்கர் வெடித்து சிதறி சமையலறையே அலங்கோலமாக உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவந்தது .

- Advertisement -

இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்கள். சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை கோமாளியாக பங்கு பெற்றார். தற்போது குக்கு வித் கோமாளி சீசன் 2விலும் கோமாளியாக பங்குபெற்று வருகிறார் மணிமேகலை. சமீபத்தில் தான் மணிமேகலை தனது குடும்பத்தாருடன் சேர்ந்தார்.

மணிமேகலை தனது கணவர் ஹுசைனுடன் சேர்ந்து யூடுயூப சேனல் ஒன்றை கூட நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் யூடுயூப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் ஒன்று மணிமேகலையின் யூடுயூப் வீடியோவை பகிர்ந்து உள்ளது. அதில், வாழ்க்கையில் நீங்கள் செய்த சவாலான விஷயம் என்ன என்று இண்டெர்வீவர் கேட்பது போலவும் அதற்கு மணிமகேலை கேஸ் சிலிண்டரை பற்ற வைத்த வீடியோவை உதாரணமாக கூறியுள்ளது யூடுயூப்.

-விளம்பரம்-
Advertisement