நாங்க வச்சிருந்த அந்த Second Hand கார எல்லாரும் கிண்டல் பண்ணாங்க – புதிய காரை வாங்கிவிட்டு கெத்தாக மோனிஷா போட்ட ட்வீட்.

0
873
Monisha
- Advertisement -

குக் வித் கோமாளி மோனிஷா புதிய கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மைம் கோபி, விசித்ரா, கிரன், சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் ஆகிய ஆறு பேரும் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தார்கள். இதில் மைம் கோபி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி, மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்து இருக்கிறார்கள். பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

மோனிஷா குறித்த தகவல்:

அந்த வகையில் மோனிஷாவும் ஒருவர். இவர் kpy நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருக்கிறார். இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கோமாளியாக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் மைம் கோபிக்கு கோமாளியாக மோனிஷா இருந்தார்கள். இவருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

மோனிஷா நடித்த படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த சீசனில் சிறந்த கோமாளி என்ற பட்டத்தை மோனிஷா வாங்கி இருந்தார். அதிலும் இந்த நிகழ்ச்சியில் இவர் பலவிதமான கெட்டப்புகளில் கலக்கியிருந்தார். குறிப்பாக கோவை சரளா பிச்சைக்காரி கெட்டப் மிகப்பெரிய அளவில் கிட் கொடுத்திருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலமே இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு வந்தது. அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தங்கை கதாபத்தில் மோனிஷா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

விஜய் டிவி பிரபலங்கள் :

இந்த படமும் மிகப்பெரிய அளவில் கிட் கொடுத்தது. இதனை அடுத்து மோனிஷாவிற்கு பட வாய்ப்புகள் வருகிறது. இந்த நிலையில் மோனிஷா புது கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வருகிறது. சமீப காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் புது கார் வாங்கி அதனுடன் எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் சரண்யா, மணிமேகலை, கேப்ரில்லா, ரக்ஷிதா என்று பல பேர் புது கார்களை வாங்கி பதிவிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி இருக்கிறார்கள்.

மோனிஷா வாங்கிய புது கார்:

அந்த வகையில் தற்போது மோனிஷா புது கார் வாங்கி இருக்கிறார். அதனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, இதற்கு முன்பு எங்களுடைய குடும்பம் இரண்டு முறை செகண்ட் ஹேண்ட் கார் வாங்கி இருந்தது. அதில் ரொம்ப கஷ்டப்பட்டார்கள். அதனால் தான் புது கார் வாங்கினேன். இப்போது என்னுடைய கனவு நிறைவேறி இருக்கிறது என்று எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார். இவர் வாங்கி இருக்கும் கார் Hyundai Exter . இதனுடைய மதிப்பு 12 லட்சம் என்று கூறப்படுகிறது. தற்போது இவர் புது கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Advertisement