தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த இதே புடவையில் பவித்ரா நடத்திய போட்டோ ஷூட் – அவங்க தங்கச்சி மாதிரி இருகாங்களே.

0
12581
pavithra

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகிவந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்புகிடைத்தது . அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில்இருந்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.

இதையும் பாருங்க : நிறைவேறிய 10 ஆண்டு கனவு – ஹீரோவாக தனது முதல் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட அஸ்வின். அட படத்துல இந்த கோமாளியும் இருக்காராம்.

- Advertisement -

நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

இது சீரியலில் தான் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் அஸ்வினும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் காமெடி நடிகர் சதிஷ்ஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் கதாநாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார். பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த அதே போன்ற புடவையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement