எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல – சமந்தாவின் பாராட்டு குறித்து பவித்ரா லட்சுமி விளக்கம்.

0
3377
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.

-விளம்பரம்-

நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பள்ளியில் சொன்னதை இன்று நிரூபித்துள்ள மாதவன் – வைரலாகும் ஸ்கூல் போட்டோ. (பாத்தா அசந்துடுவீங்க)

- Advertisement -

பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் தெறி படத்தில் சமந்தா கட்டி வந்த அதே போன்ற புடவையில் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படி ஒரு பவித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு ‘நான் உங்களை போலவே இருக்கிறேனா ? ‘ என்று பதிவிட்டு சமந்தா டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சமந்தா , நீங்கள் மிகவும் அழகா இருக்கிறீர்கள் என்று பதில் அளித்துள்ளார்.

ஆனால், உண்மையில் இது பவித்ராவின் ட்விட்டர் கண்ணாகிய கிடையாதாம். இது பவித்ரா லட்சுமி பெயரில் இயங்கும் போலி கணக்காம், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பவித்ரா, குறிப்பு இது போலி ஐடி, எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சமந்தா மேம் உங்களின் இந்த கனிவான செயலுக்கு நன்றி. ஆனால், இது எனக்கு சொந்தமானது அல்ல. ஏனென்றால் மேக்கப் களைஞர் மித்ராவின் லுக்கை ரீ- கிரியேட் செய்ய நினைத்தார். நாங்கள் அனைவரும் உங்களின் மிகப்பெரிய ரசிகர்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement