பள்ளியில் சொன்னதை இன்று நிரூபித்துள்ள மாதவன் – வைரலாகும் ஸ்கூல் போட்டோ. (பாத்தா அசந்துடுவீங்க)

0
1370
madhavan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. மாதவன் ஆரம்ப காலகட்டத்தில் இந்தி சீரியல்களில் நடித்து வாழ்ந்தார். அதன் பின்னர் தான் படங்களில் நடிக்கத் துவங்கினர்.

-விளம்பரம்-

மாதவன் அவர்களை இருவர் படத்திற்காக ஆடிஷன் செய்ய அழைத்தார் மணிரத்தினம். பின் உனது கண்கள் இளமையாக இருக்கின்றது. இந்த வேடத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று கூறி மணிரத்தினம் அனுப்பினார்.அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தான் இயக்குனர் மணிரத்னம் மீண்டும் மாதவனை அழைத்தார். அலைபாயுதே படம் துவங்கி அதன் பின்னர் பல்வேறு படங்களில் ஒரு சாக்லேட் பாயாக நடித்தார் மாதவன்.

இதையும் பாருங்க : கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் மாரடைப்பா ? விவேக் நிலை குறித்து SIMS மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை.

- Advertisement -

பின்னர் ஆயுத எழுத்து, தம்பி போன்ற படங்கள் மூலம் தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக நிரூபித்தார். இது மட்டுமல்லாமல்  இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கி இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் நடிகர் மாதவன் தனது பள்ளி காலத்தில் ஸ்லாம் கூறிய கனவுகளை தற்போது அடைந்து இருக்கிறார். அதாவது பள்ளி காலத்தில் தான் ஒரு வசதி படைத்த நடிகராக ஆக வேண்டும் என்பது தான் லட்சியம் என்று கூறியுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவர் சொன்னது போலவே தற்போது ஒரு வசதியான நடிகராக இருந்து வருகிறார் மாதவன்.

ACTORS PROFILES: ACTOR R.MADHAVAN RARE IMAGES,REAL LIFE

மாதவன் பள்ளியில் படிக்கும் போது மிகவும் படிப்ஸ் எல்லாம் கிடையாது. மிகவும் சராசரி மாணவர் தான். கடந்த +2 தேர்வு முடிவுகள் வெளியான போது, மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ட்வீட் ஒன்றை போட்ருந்தார் மாதவன். அதில், எதிர்பார்த்ததை போல அதிக மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதேபோல குறைவான மதிப்பெண்களை பெற்றவர்களே, நான் என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 58 சதவீதம் தான் எடுத்தேன். எனவே, உங்களின் வாழ்க்கை என்னும் தொடக்கூட இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார் மாதவன்.

-விளம்பரம்-
Advertisement