அட, இது தான் புகழின் வருங்கால மனைவியா ? பிறந்தநாளில் ‘ஐ லவ் யூ’ என்று குறிப்பிட்டு புகழ் வெளியிட்ட புகைப்படம்.

0
1089
pugazh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருந்தது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்கள் இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது.

-விளம்பரம்-

மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் இருக்கிறார்கள். குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு புகழ் காமெடி மழை பொழிந்து தள்ளி இருந்தார்.

- Advertisement -

புகழின் சின்னத்திரை பயணம்:

இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு 2008ம் ஆண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். பின்னர் இவர் மேக்கானிக் கடையில் வேலை செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் பல கடையில் வேலை செய்து இருக்கிறார். அதன் பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார். இப்படி படிப்படியாக விஜய் டிவியில் வந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி உள்ளார். அதிலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி தந்தது.

புகழ் நடித்த படம்:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு புகழ் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் ஹரிஹரன் இயக்கி இருக்கிறார். மேலும், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா என்று பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வைரலாகும் புகழ் புகைப்படம்:

அதுமட்டுமில்லாமல் தற்போது ஒளிபரப்பாக இருக்கும் குத் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொள்ள வில்லை என்றும் அப்ப அப்போ சிறப்பு விருந்தினராக வருவார் என்றும் கூறப்படுகின்றது. இது ஒரு பக்கமிருக்க, புகழ் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது புகழ் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புகழுடன் பெண் ஒருவர் இருக்கிறார். இதை பார்த்து பலரும் புகழுடைய லவ்வரா இருக்குமோ? என்றும் இவர்தான் உங்கள் வருங்கால மனைவியா? என்றும் கேட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஒளிபரப்பாக இருக்கும் குத் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் புகழ் கலந்துகொள்ள வில்லை என்றும் அப்ப அப்போ சிறப்பு விருந்தினராக வருவார் என்றும் கூறப்படுகின்றது. இது ஒரு பக்கமிருக்க, புகழ் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது புகழ் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் புகழுடன் பெண் ஒருவர் இருக்கிறார். இதை பார்த்து பலரும் புகழுடைய லவ்வரா இருக்குமோ? என்றும் இவர்தான் உங்கள் வருங்கால மனைவியா? என்றும் கேட்டு வருகிறார்கள்.

கேள்வி கேட்டு வரும் ரசிகர்கள்:

அதுமட்டுமில்லாமல் சில வாரங்களுக்கு முன்பு கேர்ள் பிரண்டுடன் பைக் ரைட் என்று புகழ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதில் புகழின் முதுக்கு பின் ஒரு கை மட்டும் தெரியும். அந்த பதிவில் அவர் மிஸ் யூ பார்ட்னர் என்று புகழ் பதிவிட்டு இருந்தார். இதை எல்லாம் வைத்து பார்த்தால் அப்போது அந்த நபர் இவர்தானா? என்றும் கேட்டு வருகிறார்கள். மேலும், இதற்கு புகழ் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகும் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement