அஸ்வின் போல வருவார் என்று எதிர்பார்த்து இறக்கப்ட்ட ராஜ் ஐயப்பன் – எலிமினேஷனுக்கு பின் வந்த முதல் Live.

0
138
- Advertisement -

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது குறித்து நடிகர் ராஜ் ஐயப்பன் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருக்கிற பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, விசித்ரா, ஆண்ட்ரியான், ராஜ்ஐயப்பா, பாக்கியலட்சிமி VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் VJ சிவாங்கி உட்பட பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

அதோடு இந்த சீசனில் புதிய கோமாளிகளும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே தங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது முகங்கள் போட்டியாக கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ராஜ்யப்பன். இவர் அஜித் குமாருடன் படத்தில் தம்பியாக நடித்திருக்கிறார். வழக்கம்போல் நிகழ்ச்சி ஆரம்பித்து வாரம் வாரம் வித்தியாசமான டாஸ்க்களும் நாமினேஷன்களும் நடைபெற்றது.

வெளியேறிய ராஜ் ஐயப்பன்:

அந்த வகையில் இதுவரை 3 எலிமினேஷன் முடிந்து கடந்த வாரம் நான்காவது எலிமினேஷனும் நடைபெற்று இருக்கிறது. இதில் எதிர்பாராத விதமாக ராஜ் ஐயப்பன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து ராஜ் அவர்கள் வெளியேறிய பிறகு முதல் முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நான்காவது எலிமினேஷனாக நான் தான் வெளியேறி இருந்தேன். இந்த நிகழ்ச்சியில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகன். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்த இடத்திற்கு போனாலும் பலரும் என்னிடம் வாழ்த்துக்களை சொல்கிறார்கள். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு இதுவரைக்கும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

நான் நிகழ்ச்சியில் இருக்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருந்தார்கள். அடிக்கடி மோட்டிவேஷனலாகவும் பேசுவார்கள். இந்த சின்ன நேரத்தில் என்னை பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததற்கு நன்றி. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளுக்கும் நன்றி. இந்த நிகழ்ச்சியின் ஹீரோ, வில்லன் எல்லாமே கோமாளிகள் தான். நான் பெரிதாக யாரிடமும் பேச மாட்டேன். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பேரிடம் நான் பேச ஆரம்பித்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். இப்படி ராஜ் ஐயப்பன் வெளியிட்ட வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement