உங்க புகைபடத்தை அனுப்புங்க. இதான் என் நம்பர். ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாவில் கமன்ட் செய்துள்ள இயக்குனர்.

0
54954
ramyapandian
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் திடீரென்று பிரபலமடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜ முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிங்கர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

-விளம்பரம்-

நடிகை ரம்யா பாண்டியன் திருநெல்வேலியில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் முதன் முதலில் குறும் படங்களில் தான் நடிக்க தொடங்கினார். குறும் படங்களுக்கு பிறகு தான் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கின. இவர் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் அவர் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : போய் பாகிஸ்தானில் இன்னொரு புருஷனை பாரு – bjp ஆதரவாளருக்கு குஷ்பூ கொடுத்த பதில்.

ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர். அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். இருப்பினும் அம்மணி, ரசிகர்கள் தன்னை மறக்க முடியாத வண்ணம் கவனமாக இருந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணமே அடிக்கடி இவர் நடத்தும் போட்டோ ஷூட் தான்.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று இருந்தார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டும் வருகிறார். அதிலும் இவர் புடவையில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் காட்டுக்குள் இருப்பது போல கையில் கோரை பாயுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட நடிகர் மற்றும் இயக்குனர் என்று கூறி, தனது படத்தில் நடிக்க ரம்யா பாண்டியனை கேட்டுள்ளார். மேலும், உங்களின் புகைப்படத்தை அனுப்புங்கள் என்று அவரது நம்பரையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement