தமிழ்சினிமாவில் உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் உலகநாயகன் கமல். சிறுவயது முதலே சினிமாவில் இருந்து வரும் கமல் தற்போது சினிமாவில் 60 ஆண்டுகளை கடந்து விட்டார். சிவாஜிக்கு பின்னர் நடிப்பின் ஜாம்பவானாக கருதப்படும் கமல் முத்தக் காட்சிகளும் முன்னோடியாக தான் இருந்தார் என்று கூறினாலும் அதற்கு மிகையில்லை. 80 காலகட்டத்திலேயே கமல் கதாநாயகிகளுடன் லிப் லாக் காட்சிகளில் நடித்துமுத்த நாயகன் என்ற பட்டப் பெயரையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் புன்னகை மன்னன் படத்தில் நடிகை ரேகாவை கமல், அவரது அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்துவிட்டார் என்று நடிகை ரேகாவே பேட்டியில் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ரேகா. இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானது கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான கடலோர கவிதைகள் படத்தின் மூலம்தான். இந்த படத்தில் ஜெனிபர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திலேயே கமலுக்கு ஜோடியாக புன்னகை மன்னன் படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இந்த படத்தின் ஒரு காட்சியில் மலை உச்சியிலிருந்து 1 2 3 என்று சொல்லிவிட்டு மலைமீது கமல் மற்றும் ரேகா குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சி இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாது. அதிலும் இந்த காட்சிக்கு முன்னதாக கமல் ரேகாவுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியும் மறக்க முடியாது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள ரேகா இந்த காட்சியின்போது கமல் தனக்கு முத்தம் கொடுக்கப் போகிறார் என்பதே தனக்கு தெரியாது என்று பகீர் தகவலை கூறியுள்ளார். இந்த பேட்டியின் போது ரேகாவின் அந்த குறிப்பிட்ட காட்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

வீடியோவில் 8 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

Advertisement

அதற்கு பதிலளித்த ரேகா அந்த படத்தில் நான் நடித்தபோது நான் மிகவும் சின்னப்பெண் அப்போதுதான் நான் பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வந்தேன் எனக்கு சினிமாவை பற்றி எதுவுமே தெரியாது. நான் கடலோர கவிதைகள் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஒரு 15 நாளிலேயே எனக்கு பாலசந்தர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதன்பின்னர் பாலச்சந்தர் சாரை சந்தித்த போதுதான் கமலை நான் முதன் முதலில் பார்த்தேன். அப்போது அவர்கள் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு 100 சதவீதத்தில் ஒரு 30 40 சதவீதம் தான் நான் நடித்தேன்.

Advertisement

அந்த மலை மீது எடுக்கப்பட்ட காட்சியின்போது கமல் மற்றும் பாலச்சந்தர் சார் தான் எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அப்போது கண்ணை திறந்து கொண்டு தான் நடிப்பாயா கண்ணை மூடு என்று சொன்னார். அதன் பின்னர் சொன்னது ஞாபகம் இருக்கிறதா கமல் ? என்று பாலசந்தர் சார் கமலிடம் கூறினார். அதன்பின்னர் ஒன்று இரண்டு மூன்று என்று சொன்னதும் என்னை பிடித்து முத்தம் கொடுத்துவிட்டார் கமல். இந்த காட்சிக்கு பின்னர் நான் என் அப்பா அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார் என்று சொன்னேன். ஆனால், அவர்கள் இது ஒன்றும் அசிங்கமாக தெரியாது இது காதில் வெளிப்பாடாகத்தான் தெரியும் என்று சொன்னார்கள்.

இருப்பினும் ஒரு இரண்டு நாட்களாக என்னுடைய தந்தை பார்த்தால் என்னை திட்டுவாரே என்று உறுத்திக்கொண்டே இருந்தது. மேலும், என் அம்மாவிடம் நான் சொன்னேன் ‘என்னை ஏமாற்றி முத்தம் கொடுத்து விட்டார்கள்’ என்று. அதன் பின்னர் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த பின்னர் தான் அந்த காட்சியின் போது ரசிகர்கள் அப்படி கூவினார்கள். அவர்கள் சந்தோஷத்தில் கூவிகிறார்களா இல்லை தூக்கத்தில் கூவிகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. அதன் பின்னர் பலமுறை இது குறித்து பேட்டி அளித்து இருக்கிறேன். அதனால் கமல் சாருக்கு என் மீது கோபம் இருக்கலாம். பாலச்சந்தர் சார் என் மீது கோபம் இருந்திருக்கலாம். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டும் அல்லவா, என்னிடம் சொல்லாமல் இந்த காட்சியை எடுத்து விட்டார்கள் என்பதை பலமுறை கூறி விட்டேன். அதை சொல்லிவிட்டும் நம்பவில்லை என்றால் என்ன செய்வது என்று கூறியுள்ளார்.

Advertisement