முடிந்தது குக் வித் கோமாளி சீசன் 2வின் பைனல் ஷூடிங் – யார் வெற்றிபெற்றாங்க சொல்லுங்க பாப்போம்.

0
1317
cooku
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர்.

இதையும் பாருங்க : விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கு நன்றி – பிரச்சாரத்தில் மகிழ்ச்சியோடு பேசிய எடப்பாடி பழனிசாமி. வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஷகீலா மற்றும் பவித்ரா ஆகிய இருவர் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த வாரம் இறுதி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரம் செலிப்ரேஷன் வீக் கொண்டாடபட்டு வருகிறது.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் அடுத்த வாரம் இந்த சீசனின் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து, எடிட்டிங் பணிகள் நடந்து வருகிறது. ஆம் குக் வித் கோமாளி பைனல் நிகழ்ச்சியின் எடிட்டிங் பணிகள் செய்யும் இடத்தில் இருந்து படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இதனால் யார் வெற்றிபெற்றுள்ளார் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் வெளியாகி விடும். இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

-விளம்பரம்-
Advertisement