எப்படி இருந்த செட்டு இப்போ எப்படி ஆகிடிச்சி பாருங்க – கண்ணீருடன் ஷிவாங்கி பதிவிட்ட புகைப்படம்.

0
701
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 6 மணி நேரம் நடைபெற்ற இறுதி போட்டியில் அணைத்து போட்டியாளர்களும் அணைத்து கோமாளிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : அவர் கிட்ட புடிச்சது இதான் – தன்னை பற்றி விஜய் பேசிய வீடியோவை பகிர்ந்த சித்தார்த் (சரியான குசும்புபா இந்த மனுஷன்)

- Advertisement -

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் அணைத்து போட்டியாளர்களும் கண்ணீர் விட்டனர். அதிலும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த தாமு, இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததை எண்ணி கண்ணீர் மல்க அழுதார். மேலும், இந்த செட்டில் வந்தால் தான் நான் சிரிப்பேன் என்று மிகவும் உருக்கத்துடன் தெரிவித்து இருந்தார் தாமு. தாமு அழுததை பார்த்து செட்டில் இருந்த அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் குக்கு வித் கோமாளி செட்டில் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சி கூட நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் குக்கு வித் கோமாளி செட்டை முழுமையாக பிரித்து எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், குக் வித் கோமாளியில் அனைவரின் குயூட்டி பையாக இருந்த ஷிவாங்கி கூட அந்த புகைப்படத்தை உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement