கோமாளி ஷிவாங்கிய பாத்திருப்பீங்க – நடிகை ஷிவாங்கியா பாத்திருக்கீங்களா – வெளியான போஸ்டர் இதோ.

0
3132
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வந்த கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில்இருந்தது . சொல்லப்போனால் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து இருந்தது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார்.

இதையும் பாருங்க : ஏ ஆரால் மங்கிய ராஜாவின் புகழ் – கசின் சொன்ன அந்த வார்த்தையால் யுவன் எடுத்த முடிவு. செம வீடியோ.

- Advertisement -

பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார். அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Gallery

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார், அந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது, இது தன் சிவாங்கி நடிப்பில் முதன் முறையாக வெளிவரும் போஸ்டர் இதோ.

-விளம்பரம்-
Advertisement