தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் யுவன்ஷங்கர் ராஜாவும் ஒன்று. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் தெரிந்த ஒன்று-. இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், யுவன் அவர்கள் முன்னணி நட்சத்திரங்களின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இதுவரை யுவன் 125 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் படத்திலும் பணியாற்றியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படம் மூலம் தான் முதன் முதலில் இசையமைப்பாளராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இதையும் பாருங்க : எல்லாரும் கண் தானம் பண்ணுங்க, அதுக்கு துவக்கமா நான் கண் தானம் செய்றேன். அசத்திய பிக் பாஸ் பிரபலம்
இந்நிலையில் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பற்றியும் தன்னுடைய இசை பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இந்த தருணத்தில் ஏ ஆர் ரகுமானுக்கு தான் நன்றி சொல்லணும். ஏன்னா, நான் ஸ்கூல் படிக்கும் போது ஏ ஆர் ரகுமான் தான் டாப்பில் இருந்தாரு. எல்லோரும் இளையராஜா மகன் சொன்னாலே செம மரியாதை இருக்கும்.
அந்த சமயத்தில் என்னோட உறவினர் ஒருவர் உங்க அப்பா எல்லாம் ஒன்னும் இல்ல இனிமேல் ஏ ஆர் ரகுமான் தான் எல்லாமே,அவருடைய பாடல் எல்லாம் பார்த்தியா வேற லெவல்ல இருக்கு என்று சொன்னார். எனக்கு அப்படி அவர் சொன்னவுடனே அந்த நைட் எல்லாம் தூக்கம் வரல. அப்ப என் மனதில் தோணுச்சு அப்பாவோட இசை கனவை அழியவிடக்கூடாது.
அப்பதான் எனக்கு இசையில் இன்னும் அதிகமாக ஆர்வம் வந்தது. இசைதான் நம்மளுடைய லட்சியம் என்று நினைத்து நான் என்னுடைய இசைப் பயணத்தை தொடங்க ஆரம்பித்தேன். இதற்கு காரணம் ஏ ஆர் ரகுமான் தான். அவருக்கு தான் தேங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று கூறி இருந்தார். தற்போது யுவன் வலிமை படத்திற்கு இசை அமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.