நானும் மக்களுக்கு சமையல் டிப்ஸ் குடுக்க போறேன் – வீடியோ வெளியிட்ட மற்றொரு குக்கு வித் கோமாளி பிரபலம்.

0
1054
uma

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

Watch Cooku with Comali Season 1 Episode 7 on Hotstar Premium

இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது.பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா. சொல்லபோன்னால் தான் வனிதாவால் தான் trp எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி வனிதாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வைத்தார்கள்.

இதையும் பாருங்க : ஆடுகளம் படத்திற்கு முன்பாகவே ஜீவாவின் ‘ஈ’ படத்தில் நடித்துள்ள அட்டகத்தி தினேஷ். எப்படி இருக்கார் பாருங்களே.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியிலும் வனிதா ஆதிக்கத்தை செலுத்தி முதல் இடத்தை பிடித்தார்.இந்த நிகழ்ச்சியில் வனிதா செஞ்ச ரெசிபிக்களை வேற லெவல். இந்த நிலையில் வனிதா புதிய யூடுயூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை இந்த சேனலை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து உள்ளனர்.

இந்த நிலையில் வனிதாவை போலவே குக்கூ வித் கோமாலியில் பங்குபெற்ற உமா ரியாஸ்சும் குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் செய்த தனது ரேசிப்பிக்களை மக்களுக்கு கொண்டு செல்லு விரும்புவதாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். எனவே, வனிதாவை போல இவரும் யூடுயூப் குக்கிங் சேனலை ஆரம்பிக்க போகிறாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

-விளம்பரம்-
Advertisement