ஆடுகளம் படத்திற்கு முன்பாகவே ஜீவாவின் ‘ஈ’ படத்தில் நடித்துள்ள அட்டகத்தி தினேஷ். எப்படி இருக்கார் பாருங்களே.

0
30681
Dinesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் அட்டகத்தி தினேஸும் ஒருவர். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அட்டகத்தி படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதிலிருந்தே இவரை அனைவரும் அட்டகத்தி தினேஷ் என்று தான் அழைக்கிறார்கள். இவர் அதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கபாலி, ஒரு நாள் கூத்து, அண்ணனுக்கு ஜே போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. கதையின் தன்மைக்கு ஏற்ப தன்னுடைய உடலையும் வருத்தி நடிக்கும் நடிகர்களில் அட்டக்கத்தி தினேஷும் ஒருவர். சமீபகாலமாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் தினேஷ் அவர்கள் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : லைவ் சாட்டில் கக்கூஸ்லியா என்று கிண்டலடித்த சாக்ஷி – உடன் இருந்த ரேஷ்மா – கடுப்பாகி ரசிகர் கேட்ட கேள்வி. ரேஷ்மா விளக்கம்.

- Advertisement -

நடிகர் தினேஷ் அவர்கள் முதன் முதலாக 2006 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஈ என்ற திரைப்படத்தில் மூலம் தான் துணை நடிகராக சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஆடுகளம் என்ற படத்தில் நடித்து இருந்தார். பிறகு மௌனகுரு என்ற படத்திலும் துணை நடிகராக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு தான் இவர் அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது இவர் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், யூடூப்பில் பிரபலமடைந்த டெம்பில் மங்கீஸ் இயக்குனர் விஜய் வரதராஜன் “பள்ளு படாம பாத்துக்கோ” என்ற படத்தை இயக்கி இருக்கிறார் . இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்து உள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-
Advertisement