நான் என்ன சமைச்சாலும் அவர் குறை சொல்லிட்டு இருப்பார். குக்கூ வித் கோமாளி உமா ரியாஸ்.

0
3207
uma-riyas
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சி. சமையல் நிகழ்ச்சி என்றால் மற்ற நிகழ்ச்சிகளை போல அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது. சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. விஜய் டிவி இந்த முறை சமையல் நிகழ்ச்சியில் ஒரு புது மாதிரியான அட்ராசிட்டியை கொண்டு வந்து உள்ளது. மேலும், ஒவ்வொரு வாரமும் புதுப்புது டிஸ் உடன் போட்டியாளர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை. இதுவரை வந்த சமையல் நிகழ்ச்சியை விட இந்த சமையல் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விரைவாக பிரபலம் அடைந்தது என்று சொல்லலாம்.

-விளம்பரம்-
Image result for cook with comali uma riyaz

- Advertisement -

மேலும், சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங்கில் இந்த நிகழ்ச்சி தான் உள்ளது. இந்த ட்ரெண்டிங்கிற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியில் இருக்கும் கோமாளிகள் தான். இவர்கள் செய்யும் கோமாளித்தனத்திற்கு அளவே இல்லை. தற்போது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு வந்து உள்ளது. இந்த இறுதி சுற்றுக்கு வனிதா விஜயகுமார், நடிகை ரேகா, நடிகை ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் என 4 போட்டியாளர்கள் தேர்வு ஆகி உள்ளார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ள நடிகை உமா ரியாஸ்கான் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.

உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபலமான நடிகர் ரியாஸ்கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். இவருடைய மூத்த மகனும் தற்போது சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரிடம் எடுத்த பேட்டியில் உமா ரியாஸ்கான் கூறியது, இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாதிரி வேறு எந்த சமையல் நிகழ்ச்சி இருக்காது. இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் லூட்டிக்கு அளவே இல்லை.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி முடிகிறது என்று நினைத்தால் தான் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நான் இந்த நிகழ்ச்சியில் செய்த சமையலை பார்த்து பலர் என்னைப் பாராட்டினார்கள். உங்களுடைய சமையல் நல்லா இருக்கு என்று எல்லாம் சொல்லி உள்ளார்கள். அது மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சியில் பல முறை நான் பாராட்டுகளையும், போனஸ் பாயிண்ட்களையும் பெற்றுள்ளேன். ஆனால், எங்கள் வீட்டில் மட்டும் அது நடக்கவே இல்லை. இப்போது வரை கூட என்னுடைய இரண்டாவது மகன் சமந்த் ஹாசனுக்கு என்னுடைய சமையல் பிடிக்கவே பிடிக்காது.

ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருப்பார். நான் ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விடுவான். அவன் என்னிடம் நீங்கள் பிரியாணி செய்யும்போது அந்த மசாலாக்கள் இல்லாமல் என்னைக்கு செய்கிறீர்களோ? அன்று நான் ஹோட்டலில் ஆர்டர் செய்யாமல் வீட்டில் சாப்பிடுகிறேன் என்று சொல்லி இருக்கிறான். நான் என்னைக்கு அதே மாதிரி செய்யுறது, அவன் எண்ணிக்கை வீட்டில் சாப்பிடுவது எனக்கு தெரியல என்று வேடிக்கையாக கூறினார்.

Advertisement