‘நீங்க என்ன சொன்னாலும் கேட்டுனு இருக்க நான் புத்தன் அல்ல’ – கடுப்பாகி சரமாரி கமெண்டுகளை பதிவிட்ட வெங்கடேஷ் பத்.

0
488
venkatesh
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார்.

- Advertisement -

சீரியஸ் செஃப் வெங்கடேஷ் பத் :

வெங்கடேஷ் பத் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருந்து வருகிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

வெங்கடேஷ் பத் சந்திக்கும் விமர்சனங்கள் :

ஆனால், அந்த நிகழ்ச்சியில் மிகவும் கறாரான ஒரு நடுவராக இருந்த இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக திகழ்ந்து வந்தார். சமையல் சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால், இவர் கோமாளிகளை அடிக்கடி பலமாக அடித்துவிடுகிறார் என்ற விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.

-விளம்பரம்-

டிவி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள் :

இதற்கு விளக்கம் கொடுத்த வெங்கடேஷ் பத், டிவியின் காண்பிப்பது எல்லாம் சும்மா தான், ஷோவை ஷோவாக மட்டும் பாருங்க என்று கூறி இருந்தார். வெங்கடேஷ் பல ஹோட்டல்களை நடத்தி வருவது போல யூடுயூப் சேனலையும் நடந்தி வருகிறார். சமீபத்தில் இவர் உன்னி அப்பம் என்ற ஒரு டிஷ்ஷை செய்து இருந்தார். அதில் இவர் நெய்யை அள்ளி வீசியதை பார்த்து பலர் கமன்ட் போட்டனர். அதற்கு பதில் அளித்த வெங்கேஷ் பத், நீங்கள் இது ஆரோக்யமில்லை என்று சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், நங்கள் இவ்ளோ நெய்யை வைத்து 4 நாள் சமைப்போம் என்று நான் நிறைய நெய் சேர்ப்பதை குறை சொல்லாதீர்கள் என்று கூறியுள்ளர்.

பதில் கொடுக்க எனக்கு உரிமை இருக்கு :

அதே போல தொடர்ந்து பல நெகடிவ் கமெண்டுகள் வந்ததால் கடுப்பான பத், என்று கூறியுள்ளார். முறை தவறாமல் கருத்து சொல்பவர்களிடம் நான் எப்பொழுதும் நாகரீகம் தவறியதில்லை. ஆனால், ஏளனமாக என்னை தெரிந்தவர் போல் நகையாடினார் நான் புத்தனல்ல. என் கருத்து உங்களுக்கு திமிர் என்றால் நான் பொறுப்பல்ல யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருக்க நான் ஒரு சூழ்நிலை கைதி அல்ல உண்மை போல் எல்லா உரிமையும்உள்ள சராசரி மனிதன். பதில் கொடுக்க எனக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

Advertisement