திரௌபதி இயக்குனரின் அடுத்த படைப்பு ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் தர்ஷாவிற்கு இப்படி ஒரு ரோலா. புகைப்படம் இதோ.

0
1516
dharsha

சமீப காலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடித்து வருகிறார். பின் சன் தொலைகாட்சியில் “மின்னலே” என்கிற தொடரிலும் நடித்து வருகிறார்.

தற்போது இவர் விஜய் தொலைகாட்சியில் இன்று ஒளிபரப்பாகும் “செந்தூரப்பூவே” என்கிற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில்ஆக்ட்டிவாக இருப்பார். இதனால் இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதுமட்டும்மல்லாமல் இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகை தர்ஷா குப்தா, அஜித்தின் மச்சான் நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். சமீபத்தில் இதை பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் தர்ஷா. அதில் நடிகை தர்ஷா குப்தா கர்ப்பமாக இருப்பது போல தெரிகிறது. எனவே, இந்த படத்தில் நடிகை தர்ஷா, திரௌபதி படத்தில் வந்த கதாநாயகியை போல ஒரு மாஸான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திரௌபதி பட புகழ் ஜி மோகன் இயக்க இருக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் குக்கு வித் கோமாளி பிரபல நடிகை கமிட் ஆகி இருக்கிறார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது .திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார் மோகன். அந்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருந்தது. இதற்கு பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

-விளம்பரம்-
Advertisement