காயத்ரி எனக்கு பொண்டாடி மாதிரி – கூல் சுரேஷின் சர்ச்சை பேச்சு. வைரல் வீடியோ இதோ.

0
102
gayathri
- Advertisement -

மாமனிதன் பட நடிகை காயத்ரி என் பொண்டாட்டி மாதிரி என்று கூல் சுர்ஸ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதோடு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக மிரட்டி இருந்தார்.

- Advertisement -

மாமனிதன் படம்:

இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். இது விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

கூல் சுரேஷின் சர்ச்சை பேச்சு:

இந்நிலையில் மாமனிதன் படத்தின் ரிலீசின் போது கூல் சுரேஷ் பேசி இருக்கும் சர்ச்சை பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, படத்தை பார்த்துவிட்டு கூல் சுரேஷ் அவர்கள், இந்த படத்தில் வரும் நடிகை காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி. உங்களுக்கு பொண்டாட்டி மாதிரி, பக்கத்து வீட்டு பொண்டாட்டி மாதிரி எதார்த்தமான நடிப்பை நடித்திருக்கிறார். அவர் எதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதை தான் நான் சொல்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

கூல் சுரேஷ் குறித்த தகவல்:

இப்படி இவர் பேசிய சர்ச்சை பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கூல் சுரேஷை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கூல் சுரேஷ். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் பிறகு நடித்து பிரபலமானார்.

அதுமட்டுமில்லாமல் இவர் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement