சிம்புகாக தான் பண்ணேன், இனி Review சொல்லவே மாட்டேன் – கண் கலங்கி அழுது கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ.

0
473
coolsuresh
- Advertisement -

சிம்பு என்னை பற்றி இப்படி கூறிட்டாரே! என்று நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர் மல்க பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி படத்தில் பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பிரபலங்கள் வருகிறார்கள்.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு:

மேலும், படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவில் சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பு தான் படத்தின் நன்றி விழா கூட நடந்திருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தின் ப்ரோமோஷனை கடந்த ஒரு வருடமாக பட்டித் தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தவர் கூல் சுரேஷ். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் கூல் சுரேஷ்.

கூல் சுரேஷ் குறித்த தகவல்:

இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கி இருக்கிறார். இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார். பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

-விளம்பரம்-

கூல் சுரேஷுக்கு நன்றி சொன்ன சிம்பு:

பின் கிடைக்கும் கதாபாத்திரங்களில் கூல் சுரேஷ் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவின் தீவிர ரசிகரும் ஆவார். எந்த படமானாலும் சரி, எந்த நிகழ்ச்சி என்றாலும் சரி இவர் வெந்து தணிந்தது காடு என்று தொடங்கி தான் தன்னுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார். வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸுக்கும் முந்தைய நாள் நடிகர் சிம்பு உட்பட பல குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி இருந்தார்கள். அப்போது கூல் சுரேஷ்க்கு மனதார நன்றி தெரிவித்து இருந்தார் சிம்பு. இந்நிலையில் இது குறித்து கூல் சுரேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, என்னை சில பேர் திட்டி இருந்தாலும், பல பேரு எனக்கு சப்போர்ட் செய்திருந்தார்கள்.

கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ:

வெந்து தணிந்தது காடு படத்திற்காக பிரமோஷன் பண்ணது நான் தான் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள். நான் சிம்பு மேல உள்ள ஆசையால் தான் இப்படி பண்ணினேன். பலர் நான் பிரமோஷன் பண்ணதுக்காக பணம் கொடுக்க சொல்றீங்க. அது வேணாம். என் கார் கண்ணாடி உடைந்ததும் நஷ்ட ஈடு கொடுக்க சொல்றாங்க. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சார் நான் அதை எல்லாம் எதிர்பார்த்து எதுவும் பண்ணவில்லை. தலைவன் சிம்புக்காக மட்டுமே இதை நான் பண்ணேன். சிம்பு கூட, தியேட்டருக்கு வந்தால் எனக்கு கூட இவ்வளவு வரவேற்பு இருக்குமா? என்று தெரியவில்லை. உனக்கு இருக்கு. அதை நீ தக்க வைத்துக் கொள் என்று சொன்னார். இப்படி எந்த ஹீரோவுமே சொல்ல மாட்டார்கள் என்று கண்ணீர் மல்க கூல் சுரேஷ் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement