புது மாப்பிளையாக இருந்தும் வெளியில் வந்து உதவி செய்த யோகி பாபு. குவியும் பாராட்டுக்கள்.

0
7474
- Advertisement -

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளார். கொரோனாவினால் இந்தியாவில் பல்வேறு துயர சம்பவங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. இந்தியாவில் கொரோனாவினால் 5734 பேர் பாதிக்கப்பட்டும், 166 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்து உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். நிறைய பேர் பிரதமர் மோடி நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் யோகி பாபு அவர்கள் கொரோனாவால் அவதியுற்று வருபவர்களுக்கு யோகி பாபு உதவி செய்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால் சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கும் உதவும் பொருட்டு நிதியுதவி கோரினார்கள்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை யோகி பாபு அவர்கள் நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். இதனைச் சிலருக்கு தன் கையாலேயே கொடுத்துள்ளார். யோகி பாபு அரிசி கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும், இப்ப தான் நடிகர் யோகிபாபுவுக்கு திருமணமானது. இருந்தாலும் இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் வெளியே வந்து மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

திருமண வரவேற்பு தள்ளிப் போனாலும் கூட அது குறித்து ஒரு கவலை இல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு இறங்கி செய்து வருகிறார். சமீபத்தில் கூட யோகி பாபு ரசிகர்கள் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு செய்து உள்ளார்கள். தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் சந்தானத்திற்கு பிறகு காமெடி நடிகர்களில் அதிக புகழையும், பிரபலத்தையும் குறுகிய காலத்திலேயே சம்பாதித்தவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். மேலும், ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு வருகிறார்.

Advertisement