மாஸ்டர் பாடலில் கொரோனா குறியீடு. இத்தன நாளா இத கவனிசீங்களா ?

0
3938
- Advertisement -

கடந்த இரண்டு மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய பல நாடுகளில் கடுமையாக இந்த கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது.

-விளம்பரம்-
Image

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 660 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 49 ஆக உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.

- Advertisement -

இதையும் பாருங்க : கேப்டனை சந்தித்து தனது திருமண வரவேற்பு பத்திரிகையை கொடுத்த யோகி பாபு.

இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் குறித்து விஜய்யின் மாஸ்டர் படத்தின் பாடலில் குறியீடு இருப்பதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டார்கள். மாஸ்டர் படத்தில் வெளிவந்த குட்டி ஸ்டோரி பாடலில் கொரோனா என்ற வார்த்தை வந்துள்ளது.

-விளம்பரம்-

இந்த பாடல் வந்ததற்குப் பிறகு தான் கொரோனா வைரஸ் வந்தது என்று சோசியல் மீடியாவில் வதந்தியை கிளப்பி உள்ளார்கள். விஜய் படம் என்றாலே ஏதாவது ஒரு சர்ச்சை தான். தற்போது இந்த கொரோனா வைரஸ்ஸை வைத்து விஜய் படத்திற்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

இதையும் பாருங்க : கொரோனா பீதியில் கூட இரண்டாவது கணவருக்கு சாமர்த்தியமாக லிப் லாப் கொடுத்துள்ள நந்தினி சீரியல் நடிகை.

பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் “மாஸ்டர்”. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Advertisement