கடந்த சில காலமாகவே சமூகவலைதளத்தில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக் எனப்படும் செயலியின் மோகம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த செயலியை பயன்படுத்தி இளைஞர்கள் சிலர் எல்லைமீறி நடந்து கொண்டு வருகின்றன.ர் மேலும், ஒரு சிலர் காவல் துறையினரால் தண்டிக்கப்படும் இருக்கின்றனர்.
எனவே, இந்த செய்தியை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கடந்த சில மாதத்திற்கு முன்னர் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக ஒரு பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “Tik Tok செயலியால் இன்று பல அபாயங்கள் உருவாகி வருகின்றன. சிறியவர், பெரியவர் என வித்தியாசமில்லாமல் மக்கள் உபயோகித்து வரும் இந்த சீன செயலியால் சில நேரங்களில் உயிரிழப்பு அபாயம் வரையில் ஏற்படுகிறது.
இம்மனு மீதான விசாரணையை விசாரித்த நீதிபதிகள், ”தவறான செயலிகளால், ஆன்லைன் விளையாட்டுகளால் நமது குழந்தைகளும் இளைஞர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆபத்தான ’ப்ளூ வேல்’ கேம் குறித்து நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் மத்திய அரசு அந்த விளையாட்டுக்குத் தடை விதித்தது. இதுபோல் சமூகத்துக்கு தீங்கு விதிக்கும் செயலிகளை அரசே முன்வந்து தடைவிதிக்க வேண்டும். Prank show போன்ற வீடியோக்களை எடுக்கவும் வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது”