ரோகினி தியேட்டரில் இருக்கைகள் சேதமடைந்தற்கு காவல் துறை தான் காரணம் என்று நீதிபதி கருத்து தெரிவித்து இருந்தார். தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தை வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்துள்ளனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இது ஒரு பக்கம் இருக்க, விஜய் படம் என்றாலே பலரும் எதிர்பார்ப்பது அவருடைய இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தான்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் கூட தயாராகி இருந்தது.இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

Advertisement

ரோகினி தியேட்டர்:

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. எப்போதும் பெரிய நடிகர்களின் டிரைலர் வெளியானால் அது ரோகிணி திரையரங்கத்தின்பார்க்கிங் ஸ்கிரீன் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும். அந்த வகையில் லியோ பட ட்ரைலரை திரையிட இருப்பதால் திரையரங்கின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் காட்சியளிக்க கோயம்பேடு உதவி ஆணையரிடம் அனுமதி கூறியிருந்தனர்.

வேண்டுமென்றால் சென்னை காவல் ஆணையம் அலுவலகத்தில் இதனை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து போலீசார் அனுமதி பெற்று ட்ரைலர் திரையிடப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ட்ரைலர் திரையிட்ட பின்னர் விஜய் ரசிகர்கள் பலர் திரையரங்கின் இருக்கைகளை அடித்து நொறுக்கி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

Advertisement

நீதிபதியின் கருத்து:

விஜய் ரசிகர்களால் ரோகிணி தியேட்டரில் இருக்கைகள் சேதுமடைந்ததற்கு போலீஸின் தவறான கையாளுதலை காரணமென்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பேரணிக்கு அனுமதிக்கு ஒரு தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்த போது அப்போது கட்டுப்பாட்டுகளுடன் அணிவகுப்பை நடத்தலாம் என்று கூறியிருந்த சுட்டி காட்டினார் திரையரங்க விஜய் ரசிகர்கள் சேதப்படுத்தியதற்கு காவல்துறையின் தவறான கையாளுதலே காரணம் என்று அவர் கூறியிருந்தார். ரசிகர்களை காவல்துறையினர் முறையாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.

Advertisement

ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்ற சம்பவத்தையும் நீதிபதியாக சுட்டிக்காட்டிருந்தார். அப்போது குறிக்கிட்ட அரசு வழக்கறிஞர் லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிற்கு பாதுகாப்பு கோரி எந்த ஒரு விண்ணப்பமும் முறையாக அளிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஏ ஆர் ரகுமான் இசையில் நடைபெற்ற குளறுபடிக்கு போலி டிக்கெட் விற்பனை தான் காரணம் என்றும் போலீஸ் காரணம் இல்லை என்றும் வாதிட்டார். ஆனால் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை படகுழுவினரே ரத்து செய்துவிட்டனர் அதற்கு காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் வேண்டுமென்றால் அவர்கள் நிகழ்ச்சியை மீண்டும் நடத்திக் கொள்ள அனுமதி கூறினாலும் பரிசீலிக்க தயார் வேண்டும் அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார்.

Advertisement