நயன்தாரா-தனுஷ் விவகாரம்: நெட்பிளிக்ஸ் இனி வழக்கை தொடரக்கூடாது – நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு

0
292
- Advertisement -

நயன்தாரா- தனுஷ் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் போட்டு இருக்கும் அதிரடி உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாவே இணையத்தில் தனுஷ்-நயன்தாரா இடையேயான விவகாரம் தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை.

-விளம்பரம்-

விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள். மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வெளியான ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதன் காரணமாக தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது.

- Advertisement -

நயன் – தனுஷ் சர்ச்சை :

பின் நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டி கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார். அதை தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் ஆவணப்படத்தில் பெற்றிருந்தன. அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் அவர்கள் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் தனுஷ், பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும், நானும் ரவுடிதான் பட காட்சியை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதற்குப்பின் நயன்தாரா, நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்திய காட்சியை இந்த ஆவண படத்தில் இணைக்கவில்லை. எங்களுடைய சொந்த சேகரிப்பில் இருந்தே இந்த காட்சியை பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.

தனுஷ் தொடர்ந்த வழக்கு :

பின் இது தொடர்பாக நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் Netflix நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருந்தது நீதிமன்றம். இதை அடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது. அப்போது தனுஷ் தரப்பில், நானும் ரவுடிதான் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் உட்பட அனைத்து விஷயங்களுக்குமான காப்புரிமை அனைத்தும் எங்களிடம் இருக்கிறது. நயன்தாரா அணிந்திருக்கும் ஆடையின் மீது கூட காப்புரிமை இருக்கிறது. உண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் தான் நயன்தாரா கையெழுத்திட்டு இருக்கிறார். இதை கருத்தில் கொண்டு வழக்கை தடை செய்யாமல் விசாரிக்க எடுத்துக் கொள்ள வேண்டும். டாக்குமென்டரியில் நானும் ரவுடிதான் பிடிஎஸ் காட்சியாக 28 வினாடி வீடியோவை நயன்தாரா பயன்படுத்தியிருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்பிளிக்ஸ் தொடர்ந்த வழக்கு:

அதன்பின் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில், உண்டர்பார் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இருக்கிறது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. உண்டர்பாரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தது. இதற்கிடையில் netflix நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆரம்ப கட்டடத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள்.

நீதிபதி உத்தரவு:

இதற்கிடையில் netflix சார்பில், படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு உண்டர்பார் நிறுவனம் பதிவு கேட்க முடியாது. படப்பிடிப்பு காட்சிகள் 2020 ஆம் ஆண்டு வெளியான போதும், தாமதமாக 2024 ஆம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை காப்பிரைட் சட்டத்தின் கீழ் தொடர முடியாது. இந்த காட்சிகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதலில் சோசியல் மீடியாவில் இருக்கிறது. மூன்றாவது நபர் இந்த காட்சிகளை எடுத்தார். இந்த ஆவணப்படம் வெளியாகி ஒரு வாரம் கழித்துதான் தனுஷ் தரப்பு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி இருந்தது. இந்த நிலையில் இது தரப்பு வாதங்களையும் விசாரித்த பிறகு நீதிபதி, உண்டர் பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று netflix தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. உண்டர் பார் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதோடு தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே ஆன பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கு தொடரலாம் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisement