ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தை தொடர்ந்து BMW கார் விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த உத்தரவு – விஜய் ரசிகர்கள கைல புடிக்க முடியாதே.

0
471
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. தற்போது விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய் ஒரு கார் பிரியர். இவரிடத்தில் ஏகப்பட்ட கார் கலெக்ஷன் இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜயிடம் கலெக்ஷன் விலை அதிகமான காரில் ஒன்று ரோல்ஸ் ராய்ஸ் கார். நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்திருக்கிறார். அந்த காருக்கு நுழைவு வரி ரத்து செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தனி நீதிபதி ஒருவர், ரீல் நடிகர்களாக இல்லாமல் ரியலாக இருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்து பேசி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் இருந்தார்.

- Advertisement -

ரோல்ஸ் ராய்ஸ் கார் பிரச்சனை:

இதனால் மனவேதனை அடைந்த விஜய் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நீதிபதி கூறிய கருத்தை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இப்படி இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததற்கு தற்போது விஜய்க்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்ப தான் இந்த பிரச்சினை முடிந்திருக்கும் நிலையில் மீண்டும் நடிகர் விஜய்யின் சொகுசு கார் குறித்த புது பிரச்சனை கிளம்பியிருக்கிறது. நடிகர் விஜய் 2005 ஆம் ஆண்டில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ரக கார் வாங்கியிருந்தார்.

Thalapathy Vijay Rolls Royce Car Has Been Spotted On Chennai

விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 ரக கார்:

இந்த கார் 63 லட்ச ரூபாய். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த காருக்கான சுங்க வரியை முறையாக செலுத்திவிட்டு தான் விஜய் இந்தியாவிற்கு இறக்குமதி செய்து இருந்தார். இந்த நிலையில் மாநில நுழைவு வரியை தமிழக அரசு வாங்குவதற்கான அதிகாரம் உள்ளது என்று நடிகர் விஜய் இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 ரக கார் வரியை தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய் தன் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 7.98 லட்சத்தை மாநில அரசுக்கு செலுத்தினார்.

-விளம்பரம்-

மீண்டும் சொகுசு கார் சர்ச்சையில் சிக்கிய விஜய்:

ஆனால், தமிழ்நாடு வணிகவரித்துறை நுழைவு வரி செலுத்துவதில் காலதாமதம் இருந்தால் 30 லட்சத்து 23 ஆயிரம் அதாவது 400 சதவிகிதம் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்கள். இதனை அடுத்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். விசாரித்த பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கூறியிருந்தது, எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது? உச்சநீதிமன்ற உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறது.

Vijay Rolls Royce Issue Court Judgment On His Re-Appealing

வைரலாகும் விஜய்யின் சொகுசு கார் விவாகரம்:

அதுவரை நடிகர் விஜயின் பிஎம்டபிள்யூ சொகுசு கார் வழக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். வரி வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு வணிகவரித்துறை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தற்போது இந்த தகவல் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து ரசிகர்கள் விஜய் உடைய சொகுசு காருக்கு தான் ஆப்பு வைப்பீர்களா? எத்தனை முறை காருக்காக கேஸ் போடுவீங்க? இன்னும் எத்தனை கார் குறித்த வழக்கு இருக்கு? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள்.

Advertisement