தமிழில் பல்வேறு படத்தில் வசனகர்த்தாவாகவும், நடிகருமான பணியாற்றி கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், நடிராகவும் தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.
இவரது நாடகத்தின் மூலம் பல்வேறு கலைஞர்கள் சினிமாவிலும் கால்பதித்துள்ளனர். பிரபல காமெடி நடிகரான சதீசும் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான். கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.
இதையும் படியுங்க : ஜாக்கெட் போடா மாட்டீங்களா.! தான்யாவை கலாய்த்த சதீஷ்.! வைரல் வீடியோ.!
அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.
கிரேசி மோகன் கதை எழுதினால் அதில் எதாவது ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு ஜானகி என்ற பெயர் இல்லாமல் இருக்காது. `அபூர்வ சகோதரர்க’ளில் கவுதமி பெயர் ஜானகி. `தெனாலி’ படத்தில் ஜோதிகா பெயர் ஜானகி. `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சிநேகா பெயர் ஜானகி என்று கிரேசி மோகன் ஸ்கிரிப்ட்களில் ஜானகி என்ற பெயர் தவறாமல் வந்து விடும்.
அவ்வளவு ஏன் கிரேசியின் முதல் நாடகமான அலாவுதீனிலிருந்தே ஹீரோயின் பெயர் ஜானகிதான். `ஜானகி’ என்று பெயர் வைப்பதில் யாருக்காவது ஆட்சேபம் இருப்பதாகச் சொன்னால், அவர்களுக்கு எழுதவே மறுத்துவிடுவார். அதற்கு முக்கிய காரணமே கிரேசிமோகன் நகைச்சுவை எழுத்தில் பெயர் வாங்குவதற்கு காரணம் அவரது ஜானகி டீச்சர். அதனால் அவருக்கு செலுத்தும் மரியாதையாகத்தான் கிரேசியின் எல்லா படைப்புகளிலும் ஜானகி கேரக்டரை வலியுறுத்தியுள்ளார்.