மறைந்த பிரபல வசனகர்த்தா மற்றும் நடிகருமான கிரேஸி மோகனின் மனைவி காலமாகி இருக்கும் சமத்துவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் பல்வேறு படத்தில் வசனகர்த்தாவாகவும், நடிகருமான பணியாற்றி கிரேசி மோகன் உயிர் பிரிந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், நடிராகவும் தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 

இவரது நாடகத்தின் மூலம் பல்வேறு கலைஞர்கள் சினிமாவிலும் கால்பதித்துள்ளனர். பிரபல காமெடி நடிகரான சதீசும் இவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் தான். கிரேசி மோகன் 1952ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு காமெடி நடிகராக நமக்கு அறிமுகம் ஆனார். ஆனால் இவர் உண்மையில் இரு கதையாசிரியர். சென்னை அண்ணா யூனிவர்சிட்டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.

Advertisement

அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.

சொல்லப்போனால் கமல் நடித்த பல காமெடி படங்களில் வரும் வசனங்கள் கிரேசி மோகனின் வசனங்கள் தான். எப்போதுஎல்லாம் கமல் மெனக்கெட்டு ஒரு சீரியஸ் படத்தில் நடித்து முடித்தாலும் கிரேஸி மோகனை அழைத்து வசனம் எழுத சொல்லி ஜாலியான படத்தை எடுத்துவிடுவார் கமல். சினிமாவை தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கிரேஸி மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு காலமானார்.

Advertisement

கிரேஸி மோகன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் மிகவும் உணர்ச்சி பொங்க சில நினைவுகளை பகிர்ந்து, மிகவும் உருக்கத்துடன் பேசி இருந்தார். இந்த நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நேற்று காலமாகி இருக்கிறார். கிரேஸி மோகனின் மனைவி நளினி மோகன் மரணம் தொடர்பாக ட்விட்டரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ள கமல், “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

கிரேசி மோகன் கதை எழுதினால் அதில் எதாவது ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு ஜானகி என்ற பெயர் இல்லாமல் இருக்காது. `அபூர்வ சகோதரர்க’ளில் கவுதமி பெயர் ஜானகி. `தெனாலி’ படத்தில் ஜோதிகா பெயர் ஜானகி. `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் சிநேகா பெயர் ஜானகி என்று கிரேசி மோகன் ஸ்கிரிப்ட்களில் ஜானகி என்ற பெயர் தவறாமல் வந்து விடும். இதனால் ஜானகி என்பது கிரேஸி மோகன் மனைவி பெயர் என்று பலரும் நினைத்தது உண்டு ஆனால், உனக்குயில் கிரேசிமோகன் நகைச்சுவை எழுத்தில் பெயர் வாங்குவதற்கு காரணம் அவரது ஜானகி டீச்சர்.  அதனால் அவருக்கு செலுத்தும் மரியாதையாகத்தான் கிரேசியின் எல்லா படைப்புகளிலும் ஜானகி கேரக்டரை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement