தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகியது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்கியது.

விகாஸ் குப்தா:

Advertisement

இந்த 12 வது சீசனை பாலிவுட் நடிகர் சால்மான் கான் தான் தொகுத்து வழங்க வருகிறார். இவர் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். மேலும் இந்த சீனில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஐ பி எல் சூதாட்டத்தால் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார். மேலும், இவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் என்ற பெயரெடுத்தவர். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த இரண்டே நாளில் சக போட்டியாளர்களிடம் சண்டையிட்டார். பின்னர் 24 ஆம் நாள் வீட்டில் இருந்து வெளிறினார் என்பது குறிபிடித்தக்கது.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஸ்ரீசாந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்த ரோஹித் சுசந்தி என்பவரை ஓரின சேர்க்கையாளர் என்றும் அவர் பிங்க் நிற ஆடையை அணிய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோசமாக கமென்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்டு அதிருப்தி அடைந்த பிக் பாஸ் 11 நிகழ்ச்சியின் போட்டியாளரான விகாஸ் குப்தா என்பவர் ரோஹித் சுசந்திவை ஓரின சேர்க்கையாளர் என்று கிண்டல் செய்தவர்களை பிக் பாஸ் நிர்வாகம் LGBT அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஸ்ரீசாந்தின் இந்த செயலுக்கு பல்வேறு பிக் பாஸ் பார்வையாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement