குடிப்பழக்கம், குடிசையில் துறவியுடன் அடைக்களம். இறுதியில் நடிகர் சங்கத்தின் முன்பே இறந்த நடிகர்.

0
98360
udhay-prakash
- Advertisement -

சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் உதய பிரகாஷ். இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர். இவர் ஒரு சிறந்த கால்பந்து வீரரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு நடிகை விஜயசாந்தி நடித்து வெளிவந்த தெலுங்கு படமான வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார். சின்னத்தம்பி, வருஷம் 16, அன்புச்சங்கிலி, இதய வாசல், கிழக்குக் கரை, மன்னன், இது நம்ம பூமி, சாமுண்டி, உழைப்பாளி., பேண்ட் மாஸ்டர், கட்டபொம்மன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். இவர் தெலுங்கு படங்கள் உட்பட 30 படங்களுக்கு மேல் நடித்து இருந்தார். பின் பட வாய்ப்புகள் வந்த உடன் இவர் அதிகமாக குடிக்க தொடங்கினார். குடிப்பழக்கத்தினால் இவர் சூட்டிங் போகாமல் வீட்டிலேயே விழுந்து கிடப்பார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது. சில வருடங்களகவே சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் மிகுந்த கஷ்டத்தில் இருந்து வந்தார். தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் கூட இவரை கைவிட்டார்கள்.

- Advertisement -

பின் கடன் தொல்லைகள் அதிகம் ஆனது. கடன் அதிகமானதால் சென்னையை விட்டு வெளியேறி விட்டார். பின் இவர் கிராமத்தில் ஒரு குடிசையில் ஒரு துறவியின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். இவரின் நிலையை அறிந்த அப்போதைய நடிகர் சங்கம் இவரை மறு வாழ்வு மையத்தில் சேர்த்தது. பின்னர் நடிகர் சரத்குமார் அவர்கள் தனது திவான் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். ஆனால், அதற்கு பிறகும் இவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. இதனால் இவருக்கு நிறைய மன கஷ்டமும், பண கஷ்டமும் ஏற்பட்டது.

இதனால் மீண்டும் அதிக அளவு குடிக்க ஆரம்பித்தார். குடித்து விட்டு ரோட்டோரங்களில் எல்லாம் விழுந்து கிடப்பது என பல செயல்களில் ஈடுபட்டு வந்தார். குடித்து குடித்து இவருடைய கல்லீரல் கெட்டுப் போய் விட்டது. பின் ஆஸ்துமா நோயும் ஏற்பட்டது. பின்னர் இவருக்கு ஆஸ்துமா ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், மருத்துவமனையில் இருந்து கிளம்பிய பின் நடிகர் சங்கம் அருகில் உள்ள ரோட்டில் நடிகர் உதய் பிரகாஷ் விழுந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்தவுடன் போலீசார் விரைந்து வந்து அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு நடுத்தர வயது தான் இருக்கும். நடிகர் உதய் பிரகாஷ் ஆஸ்துமா மற்றும் அதிக போதை காரணமாக இறந்திருக்கலாம் என்று போலீஸார்கூறினார்கள் . இவருடைய மரணத்திற்கு கோலிவுட் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் உதய் பிரகாஷ் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னாடி கூட அவரது மச்சினர் சுப்பிரமணி அவரை காப்பாற்ற எவ்வளவோ முயன்றார். ஆனால், உதய் பிரகாஷ் குடிப்பழக்கத்தால் கொடூரமாக மரணமடைந்தார்.

Advertisement