கையில் ட்ரிப்ஸ் உடன் குக் வித் கோமாளி சிவாங்கி, அதிர்ச்சியில் ரசிகர்கள்- வைரலாகும் புகைப்படம்

0
486
- Advertisement -

சிவாங்கிக்கு மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-
shivangi

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி தான் டாப்பில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள். தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி . பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் இவர் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Cooku With Comali Shivangi First Ever Movie Appearance Poster

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி:

இவர் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது. அதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம். சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த டான் படத்தில் சிவாங்கி நடித்து இருக்கிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-
Cook With Comali Season 2 Sivakarthikeyan Mimicry As Shivangi

டான் படத்தில் சிவாங்கி :

இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் காசேதான் கடவுளடா என்ற படத்தில் சிவாங்கி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகின்றார். இப்படி குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சினிமா, பாடல் பாடுவது, நிகழ்ச்சி என சிவாங்கி பட்டைய கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.

சிவாங்கி பதிவிட்ட புகைப்படம்:

இந்த நிலையில் சிவாங்கி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், அவரது கையில் ட்ரிப்ஸ் ஏற்றி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உடல் நிலை தான் முக்கியம் என்று பதிவு செய்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் சிவாங்கி என்ன ஆச்சு? நீங்கள் சீக்கிரம் குணம் அடைந்து வரவேண்டுமென்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.

Advertisement