காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டிக்கு”தாதா சாகேப் பால்கே” விருது அறிவிப்பு – நெருங்கி வரும் தேர்தல் காரணமா ?

0
389
kantara
- Advertisement -

கடந்த ஆண்டு இந்திய சினிமாவில் அதிகமாக பாராட்டப்பட்ட படங்கள் சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் மற்றும் காந்தாராவை சொல்லலாம். இப்படங்கள் இரண்டுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்து வசூலிலும் சாதனை படைத்தது . இந்த நிலையில் பிரபல கன்னட சினிமா பிரபலங்களான கேஜிஎப் ஹீரோ யாஷ் மற்றும் காந்தாரா இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பேசுபவராக மாறி உள்ளது.

-விளம்பரம்-

கர்நாடக மாநிலத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சட்டசபையில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று தொகுதியில் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறது. இந்நிலையில் தற்போது மேற்கொண்ட கருத்து கணிப்பில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது இதனால் பாஜக கர்நாடகாவில் வெற்றி பெறுவது எளிதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

கர்நாடக சட்டசபை தேர்தல் :

எனவே பாஜகவின் மேலிடங்களான இங்கே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளன. பிரதமர் மோடியும் கர்நாடகாவில் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவங்கி வைத்திருக்கிறார். வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடப்பதினால் கர்நாடகாவில் ஆட்சியை பாஜக பிடிப்பது முக்கியமானது. இதனால் பாஜகவின் மேலிடம் கர்நாடகாவில் வெற்றி பெறுவதற்க்காக தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் கர்நாடகாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களை பிரதமர் மோடி சந்தித்து இருப்பது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

கர்நாடக பிரபலங்களுடம் சந்திப்பு :

பெங்களூரில் 5 நாள் சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதம மோடி சென்றிருந்தார். அந்த இடைவெளியில் கர்நாடகாவில் உள்ள பிரபலங்களான கேஜிஎப் பட ஹீரோ யாஷ், காந்தாரா படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி. யூடியூப் பிரபலம் ஹரத்தா ஜெயின், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் முன்னாள் இந்திய அணி கேப்டன் அணில் கும்பளே. மேலும் கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், மயங்க் அகர்வால், மணிஷ் பாண்டே உள்ளிட்டோரை சந்தித்தார் மோடி. மேலும், அவர்களுடன் அமர்ந்து விருந்தும் உண்டார்.

-விளம்பரம்-

அரசியல் லாபத்திற்கா ? :

இந்த சந்திப்பின் போது கர்நாடகாவில் உள்ள கலாச்சாரம், சினிமா, நாடகம் போன்றவற்றை குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளாராம். மேலும் கிரிக்கெட் வீரர்களுக்கு தேவையான உதவிகள், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்க தேவையானவை போன்றவற்றை தன்னால் என்ன முடியும் என்பதை கூறினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்பு சாதாரண ஒரு சந்திப்பாக மக்கள் மத்தியில் பார்க்கப்படவில்லை ஏனென்றால் அடுத்த சில மாதங்களில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருவதினால் இந்த சந்திப்பு சர்ச்சையாக மாறியுள்ளது.

ரிஷப் ஷெட்டிக்கு விருது :

இந்நிலையில், ‘சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர்’ என்ற பிரிவில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிஷப் ஷெட்டி கூறுகையில் “பிரதமர் மோடியை சந்தித்து மகிச்சியாக இருந்தது, இந்த சந்திப்பில் சினிமாவிற்கு தன்னால் செய்ய முடிந்த உதவிகளை செய்வதாக கூறினார், மேலும் காந்தார படத்தை பாராட்டினார். நான் பிரதமர் மோடியை சிறந்த தலைவராக பார்க்கிறேன் என்று கூறினார். இப்படி பிரதமர் மோடியுடனான பிரபலங்களின் இந்த சந்திப்பு விளம்பரத்திற்கு மட்டும் தான், மக்களுக்கு எந்த நம்மையும் கிடையாது இதனால் கிடையாது என்று காங்கிரசு கட்சி குற்றம் சாட்டி விமர்சித்துள்ளது.

Advertisement