சன் டிவியில் ஒளிபரப்பாக்கி வெற்றிகரமாக முடிவடைந்த மெட்டி ஒலி சீரியலில் ‘அம்மி அம்மி அம்மி மிதித்து’ என்ற பாடலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் டான்சர் சாந்தி. தன்னுடைய பதிமூன்று வயதில் ‘கிழக்கு வாசல்’ படத்தில் குரூப் டான்ஸராக சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சாந்தி. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மூவாயிரம் பாடலுக்கு மேல் நடனமாடியிருக்கிறார். அதோடு இவர் பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருக்கிறார்.
மேலும், இவர் ரஜினி, விஜய், அஜித் என பல ஹீரோக்கள் படங்களில் நடனம் ஆடி இருக்கிறார். இப்படி இவர் பிரபல நடிகர்களுடன் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான’ மெட்டி ஒலி’ சீரியல் தான். இந்த சீரியல் பாடல் மூலம் இல்லத்தரசிகள் மனதை கொள்ளை அடித்தவர் நடன இயக்குனர் சாந்தி. இந்த சீரியலுக்கு பிறக்கு இவர் எந்த சீரியலிலும் நடனம் ஆடவில்லை. இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்த சாந்தி தற்போது மீண்டும் சீரியலில் துணை வேடத்தில் நடித்து வருகிறார்.
சாந்தி ரீ – என்ட்ரி :
தற்போது சாந்தி அவர்கள் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாக அசத்திக் கொண்டு வருகிறார். இவர் விஜய் டிவியில் முத்தழகு, சக்திவேல் தொடரிலும் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய திரை வாழ்க்கை 30 ஆண்டுகளை நிறைவடைந்ததை அடுத்து மெட்டி ஒலி சாந்தி பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் ரஜினிகாந்த் குறித்து கூறியிருந்தது, சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து நடனமாட வாய்ப்பு வந்தது.
சாந்தி பேட்டி:
அப்போது ரஜினிகாந்த் அவர்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு ஏன்? சார் இப்படி கேட்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர், காதலிக்கலாம் ஆனால் காதலித்தவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சொன்னார். அப்படி அவர் சொன்னது எனக்கு மட்டுமில்லாமல் அங்கு இருந்த பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அதற்குப் பிறகு ரஜினிகாந்த் சார், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் தான் காதலியை பார்க்கும்போது நமக்குள் ஒரு ‘ஜிங்’ என்ற உணர்வு வரும் என ஜாலியாக சொன்னார்.
ரஜினி காதல்:
இது போன்ற உங்களுக்கு காதல் இருக்கிறதா? என்று கேட்டதற்கு ஆமாம் என்று சொன்னதாக மெட்டி ஒலி சாந்தி கூறி இருக்கிறார். கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது.
ரஜினி படங்கள்:
அதற்குப் பின் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்த ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு வேடத்தில் ரஜினி நடித்திருந்தார். தற்போது இவர் ஜெய்பீம் பட இயக்குனரின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதை அடுத்து தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான பட வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.