சில்க் முதல் அனுராதா வரை – சினிமாவால் கஷ்டப்பட்ட ஐட்டம் டான்சர்கள். 11 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த கணவரை பாதுகாக்க சினிமாவை விட்ட கதை.

0
1006
anurdha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் அனுராதா. இவருடைய உண்மையான பெயர் சுலோச்சனா. இவர் தன்னுடைய 13 வயதில் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். 80, 90 காலகட்டங்களில் படங்களில் கவர்ச்சி நடனங்கள் ஆடி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஒரியா போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அனுராதாவை பற்றி தெரியாத பல விஷயங்களை தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-
Silk

அனுராதாவின் சிறுவயதிலேயே சினிமா, நடனம் எல்லாம் ரத்தத்தில் ஊறிப் போனது. ஏன்னா, அனுராதாவின் பாட்டி தியாகராஜ பாகவதர் காலத்தில் குணசித்திர நடிகையாக இருந்தவர். இவருடைய அப்பா கிருஷ்ணகுமார் சினிமாவில் நடன இயக்குனராக இருந்தார். இதனால் அனுராதா தனது ஐந்து வயதிலேயே தன் அப்பாவிடம் நடனம் கற்றுக்கொண்டார். அதேபோல் அனுராதாவின் அம்மா ஒரு காலகட்டம் வரைக்கும் மேடை நாடக நடிகையாக இருந்தவர். அதற்கு பிறகு நடிகைகளுக்கு ஹேர் டிரஸ்ஸர் ஆக இருந்திருக்கிறார். அதனால் பள்ளி விடுமுறையின் போது அனுராதா பெற்றோர்களுடன் சேர்ந்து சினிமா சூட்டிங் பார்க்க போவாராம்.

- Advertisement -

அனுராதா பற்றிய தகவல்:

அப்படியே அனுராதாவிற்கு படிப்பில் நாட்டமில்லாமல் சினிமாவில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. பின் அவர் முறைப்படி நடனமும் கற்றுக் கொண்டார். சினிமாவில் ஹீரோயினியாக புகழ் பெற வேண்டும் என்று தான் அனுராதாவின் ஆசை. ஆனால், இவருடைய கனவு கலைந்து கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் பாலசந்தர் படத்தில் நடிப்பதற்கு அனுராதா ஸ்கிரீன் டெஸ்ட் எல்லாம் எடுக்க வந்து இருந்தார். ஆனால், சின்னப் பெண்ணாக இருக்கிறார்,இன்னும் போகட்டும் பிறகு நடிக்கலாம் என்று சொன்னது அனுராதாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.

அனுராதாவின் திரைப்பயணம்:

முதல் வாய்ப்பே முற்றிலும் கோணலாக போனது. இதனால் அவர் பல ஏமாற்றங்களை சந்தித்து இருக்கிறாராம். பிறகு மலையாள படத்தில் தான் இவருக்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. அப்படி இவர் தமிழில் கதாநாயகியாக நடித்திருந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த படம் கடைசி நேரத்தில் வெளியிடாததால் இவருக்கு ஏமாற்றம் தந்தது. பின் இவருடைய மன வலியை புரிந்து கொண்ட நாகேஷ் பிற இயக்குனர், தயாரிப்பாளரிடம் பேசி வேறொரு படத்தில் நடிக்க வைத்தாராம்.

-விளம்பரம்-

கிளாமர் ரோலில் அனுராதா நடிக்க காரணம்:

இப்படி கதாநாயகியாக 32 படங்களில் 4 மொழிகளில் அனுராதா நடித்திருக்கிறார். அதோடு பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக அனுராதா நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் இவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. அப்பதான் இவருக்கு கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் இவர் புகழின் உச்சத்திற்கே சென்றார். அதிலும் மலையாளத்தில் இவருக்கு கவர்ச்சி நடன வாய்ப்புகள் அதிகம். அப்படியே தொடர்ந்து இவர் பல மொழி படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தார்.

சில்க் மரணம் பற்றி அனுராதா கூறியது:

சினிமாவில் ஹீரோயினாக புகழ் பெற வேண்டும் என்று நினைத்த அனுராதா கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் புகழ் பெற்றார். அனுராதா வாழ்க்கையில் முக்கிய இரண்டு விஷயங்கள் என்றால், ஒன்று அவருடைய உயிர் தோழி சில்க் ஸ்மிதா. இருவரும் நெருங்கிய நண்பர்கள். சில்க் கடைசியில் இறக்கும் தருணத்தில் அனுராதாவிடம் பேச நினைத்து இருக்கிறார். ஆனால், அனுராதாவல் வரமுடியாத சூழ்நிலையாம். சில்க் இறந்த காரணங்களில் நானும் ஒன்றாக இருக்கிறேன். அந்த குற்ற உணர்வில் இப்போ வரைக்கும் தவிக்கிறேன் என்று அனுராதா கூறியிருக்கிறார். அதைவிட அனுராதாவின் கணவருடைய மரணம் அவரை மிகவும் பாதித்தது.

வீடியோவில் 9 : 48 நிமிடத்தில் பார்க்கவும் :

அனுராதா கணவருக்கு நடந்தது:

குரூப் டான்ஸராக இருந்தவர் டான்ஸ் மாஸ்டராக மாறினார் சதீஷ். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவரும் பல படங்களில் இணைந்து பணி புரிந்திருக்கிறார்கள். ஒரு நாள் பட சூட்டிங் முடிந்து விட்டு சென்னைக்கு வரும் வழியில் சாலை விபத்தில் சிக்கி சதிஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் சுயநினைவு இழந்து 11 வருடம் படுத்த படுக்கையிலேயே இருந்த தன் கணவரை குளிப்பாட்டுவது, சாப்பாடு ஊட்டுவது, கதை சொல்வது என்று தன்னுடைய மூன்றாவது குழந்தை போலவே அனுராதா பார்த்து வந்தார். அவரை கவனிக்க சினிமாவிலிருந்து விலகி விட்டாராம். ஆனால், 2007 ஆம் ஆண்டு அவர் கணவர் மாரடைப்பால் காலமானார்.

Advertisement