தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவானாக திகழும் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுமட்டும் இல்லாமல் ரஜினியை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா??? மேலும், தற்போது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வரவிருக்கும் "தர்பார்" படத்தின் பாடல் குறித்து பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன. இதனை தொடர்ந்து 'சர்க்கார்' படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் படம் 'தர்பார்'. மேலும், இந்த படத்தை தமிழ் சினிமா துறையில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான ஏ. ஆர். முருகதாஸ் அவர்கள் தான் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் சந்தோஷ் சிவன். மேலும், இந்த படத்திற்கு இசையமைத்தவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத் தான். அதோடு இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்த தர்பார் படம் ரஜினி காந்தின் 167 வது படம் ஆகும்.
https://www.youtube.com/watch?v=FdVuB1G2G_g
மேலும்,இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். அதோடு இந்த தர்பார் படத்தில் நம்ம தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் காவல் அதிகாரியாக நடித்து உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது. மேலும்,இந்த படத்தின் வில்லனாக பாலிவுட் நடிகர் பிரதிக் பப்பர் நடித்து உள்ளார். இந்நிலையில் தர்பார் படத்தின் வெளியீட்டு தேதியை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளார்கள். அது அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்த படம் வெளியாகும் என்று அதிகார பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். மேலும், இந்த படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்களில் தெறிக்க விட போகிறது என்றுரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதையும் பாருங்க : விஸ்வாசம் அஜித் மகள் பேபி அனிகாவின் பிறந்தநாள். இப்போதா இவ்வளவு வயசே ஆகுதா.
அதோடு பல ஆண்டுகளுக்கு பிறகு நம்ம தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் எல்லாரும் பயங்கர குஷியில் கொண்டாடி வருகிறார்கள். மேலும், இந்த படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது என்று தெரிய வந்து உள்ளது. இந்நிலையில் தர்பார் படத்தில் ஒரு பாடல் ஐயப்பசாமி பாடல்களை வெளியிடும் சிம்போனியின் பாடலில் (ரைமிங்கில்) இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவல் வந்து உள்ளது. மேலும், அதற்கான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்கள் ரசிகர்கள். அது மட்டுமில்லாமல் 'வைகாசி பொறந்தாச்சு' படத்திலிருந்து 'தண்ணி குடம் எடுத்து' பாடலில் இருந்தும் இந்த லைன்னை எடுத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
https://twitter.com/Being_Ra6cal_/status/1199666465080664064
https://twitter.com/editor_kiruba/status/1199668291855237120
இதனை தொடர்ந்து ரசிகர்கள் இணையங்களில் பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே அனிருத்தின் பல ஹிட் பாடல்கள் வெளியான போது அந்த பாடல்கள் வேறு சில பாடல்களில் இருந்து சுட பட்டது என்று பல்வேறு ட்ரோல்கள் வெளியாகி இருந்தது. அவ்வளவு ஏன் சமீபத்தில் பேட்ட படத்தில் இடம் பெற்ற 'மரணம் மாசு மரணம்' பாடல் பாக்யராஜ் நடித்த 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் பாக்யராஜ் ஒரு காட்சியில் பாடும் 'ஹா உனக்கும்' என்ற பாடலில் இருந்து அனிருத் சுட்டு விட்டார் என்ற ட்ரொல்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.





