தமிழில் அஜித்துடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் அஜித்தின் ரீல் மகளாக நடித்த பேபி அனிகா சுரேந்தர் இன்று (நவம்பர் 28 ) பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கேராள மாநிலம் மல்லபுரம் பகுதியில் பிறந்த பேபி அனிகா, சினிமாவில் அறிமுகமானது மலையாளத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சோட்டா மும்பை’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார் பேபி அனிகா.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை மீனாவின் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இதையும் பாருங்க : விஸ்வாசம் அஜித் மகள் பேபி அனிகாவின் பிறந்தநாள். இப்போதா இவ்வளவு வயசே ஆகுதா.
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து அனிகா விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்திருந்தார். பொங்கல் பாடாண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு வெளியான விஸ்வாசம் படம் இந்த வெற்றி படமாக அமைந்திருந்தது. மேலும், வசூல் ரீதியாகவும் இந்த படம் பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. மேலும், விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை துவங்கப் போகிறது என்று பகிரங்கமாக இணையதளங்களில் தகவல் வெளிவந்த போது நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அஜித் அப்பாவுடன் மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறேன் என்று அதிக சந்தோஷத்தில் கூறி இருந்தார் நடிகை அனிகா.
மேலும், அனிகா அவருடன் இரு படங்களில் மகளாக நடித்ததனாலே என்னவோ அவரை பார்த்தால் எனக்கு அப்பா உணர்வு ஏற்படுகிறது. அவரை நான் “பப்பா” என்று தான் அவரை என்றும் கூறி இருந்தார். விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் பேபி அனிகாவின் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் மிகவும் மனமுருகி போனார்கள். இந்த நிலையில் பேபி அனிகா தனது 15 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதை ஒட்டி ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.