11 ஆண்டுகள் கழித்து சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 90ஸ் கிட்ஸ்சின் பேவரைட் ஹீரோ – முக்கிய வேடத்தில் அண்ணியார்.

0
4571
rekha
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெய்வ மகள் சீரியலுக்கு பின்னர் நந்தினி சீரியலில் நடித்தார்.

இதையும் பாருங்க : காருக்குள் பெண் தோழி மற்றும் நண்பர்களுடன் விஜய் மகன் அடித்துள்ள கூத்து – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

ஆனால், அந்த தொடருக்கு பின்னர் வேறு எந்த் தொடரிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசி இருந்தார்.

Rekha Krishnappa set for her TV comeback; details inside - Times of India

இப்படி ஒரு நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொடர் மூலம் தான் ரேகா மீண்டும் சீரியலில் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறீராம். இந்த தொடரில் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் தீபக் தீபக் இறுதியாக தென்றல் சீரியலில் தான் தீபக் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி நடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement